‘குடும்பம் பற்றி அவதூறு; யூடியூப் சேனலால் மன உளைச்சல்’ - காவல் ஆணையர் அலுவலகத்தில் அருண் விஜய் புகார்!

அருண் விஜய்
அருண் விஜய்
Updated on
2 min read

தன்னையும் , தனது குடும்பத்தை பற்றி தவறான தகவல்களை யூடியூபில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் மூலம் புகாரளிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஈடுகாட்டுத்தாங்கல் கலைமகள் நகரில் திரைப்பட நடிகர் அருண் விஜய் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நடிகர் விஜயகுமாரின் மகனான இவர் ‘பாண்டவர் பூமி’, ‘யானை’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று அருண் விஜய் சார்பில் அவரது வழக்கறிஞர் ராகவன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அருண் விஜய்
அருண் விஜய்

அதில் நடிகர் அருண் விஜய் பற்றியும், அவரது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி முத்துகண்ணு( அருண் விஜயின் தாய்) பற்றியும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி சினி சமூகம் என்கிற யூடியூப் சேனலில் 7 நிமிடம் கொண்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் அருண் விஜய் குடும்ப உறுப்பினர்கள் பற்றி எட்டு வீடியோக்களை இந்த யூடியூப் சேனல் வெளியிட்டு இருப்பதாகவும், இதனால் அருண் விஜய் மன உளைச்சலில் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜயகுமாருடன் அருண் விஜய்
விஜயகுமாருடன் அருண் விஜய்

மேலும், “இந்த யூடியூப் சேனலில் பார்வையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் பல்வேறு பிரபலங்களின் தவறான படங்களை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட இந்த யூடியூப் சேனல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் பதிவேற்றம் செய்துள்ள வீடியோக்களை முடக்க வேண்டும்” என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இப்புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

2 தொகுதிகள் தான்... திமுக கறார்: பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக நிர்வாகிகளுடன் திருமா ஆலோசனை!

வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

பேருந்தில் நடந்த பயங்கர சம்பவம்.. நடிகை ஆண்ட்ரியா அதிர்ச்சி பேட்டி!

தபால் ஓட்டு... சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கிய அறிவிப்பு!

போதையில் தள்ளாடும் தமிழகம்... அரசின் மெத்தனப்போக்கு காரணமா? ஒன்று சேரும் எதிர்கட்சிகள்!?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in