காவல் ஆணையர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண் வழக்கறிஞர்... முன்னாள் காதலன் மீது புகார்!

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் பெண் வழக்கறிஞர்
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் பெண் வழக்கறிஞர்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த பெண் வழக்கறிஞர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஹசீனா(33). இவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஹசீனா தனது தாய்  பாத்திமா உடன்  புகார் அளிப்பதற்காக இன்று வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது  மனு அளிக்கும் இடத்தில் ஹசீனா அமர்ந்திருந்த போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு  ஏற்பட்டது. 

உடனே அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் ஓடிவந்து அவரை மீட்டு  ஆம்புலன்ஸ் மூலம்  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெண் வழக்கறிஞர் ஹசீனா,  குஜரால் என்பவரை காதலித்து வந்தது தெரியவந்தது ‌. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே காதல் முறிந்து ஹசீனா தனது காதலனிடம் பேசாமல் இருந்தது வந்துள்ளார். இருப்பினும் ஹசீனாவை அவரது முன்னாள் காதலன்  குஜரால் தொடர்ந்து ஆபாசமாக பேசி கிண்டல் செய்து வந்ததால் ஹசீனா இது குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி குஜராலை எச்சரித்து எழுதி வாங்கி அனுப்பினர். 

ஆனால் குஜரால் மீண்டும் ஹசீனாவை தொடர்  தொந்தரவு செய்து மிரட்டல் விடுத்து வருவதால் வேறுவழியின்றி, ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து புகார்  அளிக்க வந்திருந்தது  விசாரணையில் தெரியவந்தது. அப்போது ஹசீனா அளவுக்கு அதிகமான மாத்திரையை உட்கொண்டு காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்ததும் பின்னர் அவர் மயங்கி விழுந்ததும் தெரியவந்தது. 

இதனைத்தொடர்ந்து வேப்பேரி போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஹசீனாவுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் வழக்கறிஞர் அளவுக்கு அதிகமான மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in