கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு: தம்பதி தீக்குளிக்க முயற்சி!

தீக்குளிக்க முயன்ற தம்பதி
தீக்குளிக்க முயன்ற தம்பதி

தங்கள் நிலத்திற்குப் பட்டா வழங்காத வருவாய்த்துறை அதிகாரிகளைக் கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயன்ற தம்பதியின் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்ற மாற்றுத்திறனாளியும்,  அவரது மனைவி வீரம்மாள் என்பவரும்  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்தனர்.  அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்றி ஆட்சியர் அலுவலகம் முன்பு அவர்கள் தீக்குளிக்க முயன்றனர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர்  இதைப் பார்த்ததும் ஓடிச்சென்று அவர்களைத் தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீரை  ஊற்றி அமரவைத்து விசாரணை நடத்தினர். 

தீக்குளிக்க முயன்ற முனுசாமி கூறுகையில்  "எங்களுக்கு சொந்தமான 75 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு பட்டா கேட்டு மேட்டூர் வருவாய்  அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்தோம்.  கடந்த நான்காண்டு காலமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்குடன் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

முனுசாமி, வீரம்மாள்
முனுசாமி, வீரம்மாள்

இதுகுறித்து கேட்டதற்கு எங்கள் நிலத்திற்கு அருகாமையில் உள்ள  அதே பகுதியைச் சேர்ந்த நபர் எங்கள் நிலத்தின் வழியாக வரவேண்டும் என்பதால் பட்டா வழங்கக் கூடாது எனக் கூறி வருவதாக தெரிவிக்கின்றனர். பட்டா வழங்காததால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளோம். அதனால்தான் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம்" என்று கூறினார்.

எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பட்டா வழங்கக் கூடாது என கூறி வரும் நபர் மீது நடவடிக்கை எடுப்பதுடன்  தங்கள் நிலத்துக்கு உடனடியாக   பட்டா வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை  விடுத்தனர். 

இதையும் வாசிக்கலாமே...

சேலையில் ஒய்யாரமாய் வலம் வரும் பிரபல நடிகை

உஷார்... சிக்கன் பிரியாணியால் சுயநினைவை இழந்த 3 பேர்!

மணி ரத்னத்தால வாழ்க்கையே போச்சு.. நாசம் பண்ணிட்டார்... பொதுவெளியில் புலம்பிய பிரபலம்!

கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த 2ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

புகார் கொடுக்க வந்த சிறுமியை சீரழித்த உதவி ஆய்வாளர் கைது!பேர்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in