பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?

பிக் பாஸ் வீடு
பிக் பாஸ் வீடு
Updated on
1 min read

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த அதிர்ச்சியைக் கூட்டி இருக்கிறார் பிக் பாஸ். தற்போது வெளியாகியுள்ள புதிய புரோமோவில் மூன்று வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைய இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். இதனால் போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

’எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்ற டேக் லைனுக்கு ஏற்ப இந்த சீசனில் பிக் பாஸ் அதிரடியான பல விஷயங்களைச் செய்து வருகிறார். அதற்கேற்ப, எந்த சீசனிலும் இல்லாமல் இந்த சீசனிலும் ஐந்து வைல்ட் கார்டு போட்டியாளர்களை நிகழ்ச்சி ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே உள்ளே அனுப்பினார். அதன் பிறகு, நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் போட்டியாளர் விஜய் வர்மாவுக்கு யெல்லோ கார்டு கொடுத்து எச்சரித்தார். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய விவகாரமும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த அன்னபாரதி, கானா பாலா வெளியேற மீதமுள்ள வைல்ட் கார்டு என்ட்ரிகளான தினேஷ், அர்ச்சனா, ஆர்.ஜே. பிராவோ ஆகியோர் வலுவான போட்டியாளர்களாக மாறியுள்ளனர். இந்த நிலையில், மேலும் மூன்று வைல்ட் கார்டு போட்டியாளர்களை பிக் பாஸ் உள்ளே கொண்டு வர இருக்கிறார். இதற்கான புரோமோதான் தற்போது வெளியாகியுள்ளது. வீட்டில் உள்ள 14 போட்டியாளர்களும் உள்ளே புதிதாக வரும் மூன்று வைல்ட் கார்டு போட்டியாளர்களுடன் வெற்றி பெற்றால் பிக் பாஸ் இல்லத்திற்குள் இருக்கலாம், இல்லை என்றால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற அறிவிப்பைக் கொடுக்க போட்டியாளர்கள் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர்.

பிக் பாஸ் இல்லத்திற்குள் மீண்டும் வரவேண்டும் என வெளியேறிய விஜய் வர்மா அப்போதே விருப்பம் தெரிவித்தார். மேலும் பிரதீப்பையும் உள்ளே கொண்டு வரவேண்டும் என பார்வையாளர்கள் சொல்ல, இப்போது உள்ளே வர இருக்கும் அந்த மூன்று புதிய போட்டியாளர்கள் யார் என்பது குறித்தான ஆவல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in