HBD Priyanka Mohan| சேலையில் அசத்தும் பிரியங்கா மோகனின் கலக்கல் கிளிக்ஸ்!

காமதேனு

நடிகை பிரியங்கா மோகன் இன்று தனது 29வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் பிரியங்கா.

முதல் படத்திலேயே தனது முதிர்ச்சியான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் பிரியங்கா.

அதன் பிறகு சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’, மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

படங்கள் தேர்ந்தெடுப்பதில் அவசரம் காட்டாத பிரியங்கா மோகன், தற்போது தனுஷ் ஜோடியாக நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ வெளியாக இருக்கிறது.

அடுத்ததாக ஜெயம் ரவி ஜோடியாகவும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஹிட் நடிகையாக வலம் வருகிறார்.

இன்று தனது 29வது பிறந்தநாளைக் கொண்டாடி வருபவருக்கு, ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.