அதிர்ச்சி! கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த 2ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

 சிறுமி உயிரிழப்பு
சிறுமி உயிரிழப்பு

கர்நாடகாவில் கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் சின்னமகேரா கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் 16ம் தேதி இங்கு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக உணவு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. சாம்பார் பாத்திரத்தை பணியாளர்கள், மாணவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு எடுத்து வந்துள்ளனர்.

 சிறுமி உயிரிழப்பு
சிறுமி உயிரிழப்பு

அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவிகளில், இரண்டாம் வகுப்பு பயின்று வந்த மகந்தம்மா சிவப்பா என்ற சிறுமி, எதிர்பாராத விதமாக கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்தார்.

இதில் 50 சதவீதம் அளவிற்கு உடலில் தீக்காயம் ஏற்பட்ட மகந்தம்மாவை பள்ளியில் இருந்த ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

 சாம்பார்
சாம்பார்

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிவில் விடுமுறையில் இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் லாலாபி நடாஃப் மற்றும் பொறுப்பு தலைமை ஆசிரியர் ராஜூ ஜவான் ஆகியோரை அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி இடைநீக்கம் செய்துள்ளனர்.

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை

மேலும் பள்ளியின் தலைமை சமையலர் கஸ்தூர்பாய் தலக்கேறி என்பவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் சிறுமி சாம்பார் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!

துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!

1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!

ஐசியுவில் விஜயகாந்த்... என்ன சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம்?

பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in