கல்லூரி மாணவரை கொலை செய்த 8 சிறுவர்கள் கைது: 3 போலீஸார் சஸ்பெண்ட்!

கொலை செய்யப்பட்ட கார்த்திக் சிங்.
கொலை செய்யப்பட்ட கார்த்திக் சிங்.

கோலாரில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல் துறை அதிகாரி மகன் உள்பட 8 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கில் தடயங்களைச் சேகரிக்கத் தவறியதாக 3 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கொலை
கொலை

கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், பெச்சமனஹள்ளி லே அவுட்டைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் கார்த்திக் சிங்(17). இவர் நவ.3-ம் தேதி ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலைக்குப் பிறகு கார்த்திக் சிங்கை நிர்வாணமாக்கும்படி காவல் துறை அதிகாரியின் மகனான ஷைன் என்ற திலீப் என்பவர் கட்டாயப்படுத்தும் வீடியோ வைரலானது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், திலீப்பை விசாரணைக்கு அழைத்து எச்சரித்து அனுப்பி விட்டனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போது, கார்த்திக் சிங்கை, திலீப் உள்ளிட்ட 8 சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் பதுங்கியிருந்த திலீப் உள்ளிட்ட 8 சிறுவர்களை கோலார் டவுன் போலீஸார் இன்று கைது செய்தனர்.

கைது
கைது

இந்த நிலையில், கொலை நடந்த இடத்தில் இருந்து தடயங்களைச் சேகரிக்கத் தவறியதாக தலைமைக் காவலர் முனிராஜு, காவலர்கள் விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கோலார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.நாராயணா உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்," திலீப்பிற்கும், கார்த்திக் சிங்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக கார்த்திக் சிங் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த பிறகு கூரிய ஆயுதத்தைப் பயன்படுத்தி கார்த்திக் சிங் முகத்தில் எஸ் என்ற எழுத்தை திலீப் எழுதியுள்ளார்" என்றனர்.

கோலார் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் மூன்று கொலைகள் நடந்துள்ளன. அக்டோபர் 23 அன்று, கோலார் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீனிவாஸ்பூர் புறநகரில் கர்நாடக உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி.பரமேஸ்வராவின் நெருங்கிய உதவியாளரான ஸ்ரீனிவாஸ் வெட்டிக் கொல்லப்பட்டார். அக்டோபர் 21 அன்று கிராம பஞ்சாயத்து உறுப்பினர் அனில்குமார் படுகொலை செய்யப்பட்டார். நவம்பர் 3-ம் தேதி கார்த்திக் சிங் வெட்டிக் கொல்லப்பட்டார்.

தொடர் படுகொலைகளால் கோலார் மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in