
மகாராஷ்டிரா மாநிலத்தில் சாலையில் நோயாளியுடன் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்று திடீரென வெடித்து சிதறியதில், நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை- புனே விரைவு பாதையில் கடந்த அக்டோபர் 31ம் தேதி ஆம்புலன்ஸ் ஒன்று 74 வயது மூதாட்டி நிலாபாய் மற்றும் உறவினர்களை ஏற்றிக்கொண்டு சிகிச்சைக்காக கர்நாடகாவில் உள்ள மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸின் முன் பகுதியில் புகை வருவதை கண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர், வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்த்துக் கொண்டிருந்தார். இதேபோல் நோயாளியின் உறவினர்கள் ஆறு பேரும் உடனடியாக ஆம்புலன்ஸிலிருந்து இறங்கினர். அப்போது திடீரென ஆம்புலன்ஸ் வாகனம் வெடித்து சிதறியது.
இந்த வெடி விபத்தில் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி நிலபாய் கபால்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அதிலிருந்த சிலிண்டர் வெடித்து, இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் உருக்குலைந்து கிடைக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் நீட் தேர்வுக்குப் பயிற்சி!
ஊழல் பணம் ரூ.1 லட்சம் கோடியை மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவோம்... ராகுல் காந்தி வாக்குறுதி!
பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!
விபத்துக்குள்ளான கார்... காப்பாற்றத் துடிக்காமல் மதுப்புட்டிகளை அள்ளிச் சென்ற மக்கள்!
வயிற்று வலி மருந்து என ஹேர் டை குடித்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!