சொகுசு பேருந்தில் மோதி தீப்பிடித்த கார்... உடல் கருகி 5 பேர் பலியான சோகம்!

விபத்தில் தீப்பிடித்து எரியும் ஆம்னி பேருந்து,
விபத்தில் தீப்பிடித்து எரியும் ஆம்னி பேருந்து,

உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் - கார் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவின் மகாவான் பகுதியில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று காலை 40 பேருடன் சென்றுகொண்டிருந்த படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்தும், ஒரு காரும் மோதிக் கொண்டன. தகவலறிந்த மதுரா போலீஸார், அப்பகுதியில் வந்த வாகன ஓட்டிகள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து குறித்து போலீஸார் கூறுகையில், “இன்று அதிகாலை பிகாரில் இருந்து டெல்லி நோக்கி 40 பயணிகளுடன் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. சம்பவ இடத்தில் கார், ஆம்னி பேருந்தின் பின்பக்கம் மோதியுள்ளது. இதில் ஆம்னி பேருந்து நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதி தீப்பிடித்தது. இரு வாகனங்களிலுமே தீ பரவியது.

மதுராவில் ஆம்னி பஸ் - கார் மோதல்
மதுராவில் ஆம்னி பஸ் - கார் மோதல்

இதில் காரில் பயணித்த 5 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்ததும் ஆம்னி பேருந்தில் இருந்த பயணிகள் விரைந்து கீழே இறங்கியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்தவர்கள், விபத்து காட்சிகளை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மீட்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விபத்தால் மதுராவில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முடிவாகிறது தொகுதிகளின் எண்ணிக்கை... மூன்று கட்சிகளுடன் திமுக பேச்சு!

தமிழகத்தில் எமர்ஜென்சியா...? பகீர் கிளப்பிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

வெளியானது வேட்பாளர் பட்டியல்... பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!

அயோத்தி செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்... பஞ்சாப் முதல்வருடன் ராமர் கோயிலில் வழிபாடு!

தமிழகமே அதிர்ச்சி... ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in