சோகம்... 33,000 வோல்ட் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்த 5 காட்டு யானைகள்!

ஜார்கண்ட் வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானைகள்.
ஜார்கண்ட் வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானைகள்.

ஜார்க்கண்ட் மாநிலம், முசாபானி வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், முசாபாணி வனப்பகுதியில் சுரங்கப் பணிகளுக்காக இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனம் அதிக மின்னழுத்தம் கொண்ட மின்சார கேபிள்களை அமைத்துள்ளது. சுமார் 33,000 வோல்ட் மின்சாரம் இந்த கேபிள்களில் பாய்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக 12 யானைகள் அடங்கிய கூட்டம் அடிக்கடி சுற்றி வந்தது.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானைகள்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானைகள்.

இந்நிலையில் உபர்பந்தா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள், மின்சார கேபிள்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் சுற்றித் திரிந்தன. அப்போது திடீரென 5 யானைகளின் மீது அதிக அழுத்தம் கொண்ட மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதில் 5 யானைகளும் துடிதுடித்து உயிரிழந்துள்ளன. நேற்று இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், இன்று இது தொடர்பாக கிராமமக்கள் அளித்த புகாரின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

ஜார்க்கண்ட் வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த காட்டு யானை
ஜார்க்கண்ட் வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த காட்டு யானை

உயர் மின்னழுத்த வயர்கள் காரணமாகவே யானைகள் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ள வனத்துறையினர், பிரேத பரிசோதனை நடத்தி அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர். உயிரிழந்த 3 குட்டிகள் உட்பட 5 யானைகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பகுதியில் 12 யானைகள் சுற்றித்திரிந்ததாக கூறப்படும் நிலையில், மீதமுள்ள 7 யானைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள வன உயிரின ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in