வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல்... 5 பேரை கட்டிப்போட்டு பணம், நகை கொள்ளை!

நள்ளிரவில் முகமூடி கொள்ளை நடந்த வீடு
நள்ளிரவில் முகமூடி கொள்ளை நடந்த வீடு

கோவையில் வீட்டில் இருந்த 5 பேரை கட்டிப்போட்டு கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை மர்ம நபர்கள் அதிகாலையில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருபவர் முகமது சபீர். இவர் பீளமேடு புராணி காலனி பகுதியில் தனது தந்தை, மனைவி, மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். மெக்கா செல்ல முடிவெடுத்திருந்த சபீர், வீட்டில் 10 லட்சம் ரூபாய் பணத்தை சேகரித்து வந்த்திருந்தார். இன்று அதிகாலை அனைவரும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது, வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு குழப்பமடைந்துள்ளனர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல், கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் நடந்த கொள்ளை சம்பவத்தால் பரபரப்பு
குடியிருப்பு பகுதியில் நடந்த கொள்ளை சம்பவத்தால் பரபரப்பு

தொடர்ந்து அவர்கள் வீட்டில் இருந்த 5 பேரையும் கட்டி போட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர். கொள்ளையர்கள் வெளியேறியதை அடுத்து, வீட்டில் கட்டிப்போடப்பட்டிருந்தவர்கள் அபயக்குரல் எழுப்பியுள்ளனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் வந்து, 5 பேரையும் கட்டுகளில் இருந்து விடுவித்தனர்.

கொள்ளை நடந்த வீட்டில் போலீஸார் விசாரணை
கொள்ளை நடந்த வீட்டில் போலீஸார் விசாரணை

இது தொடர்பாக தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த 10 லட்சம் ரூபாய் பணம், 60 சவரன் நகை, வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவற்றை திருடர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிப்பதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைபற்றியுள்ள போலீஸார் கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?

அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!

உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்

தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in