
உத்தரபிரதேசத்தில் கணவன், மனைவி மற்றும் ஆறு குழந்தைகள் ஒரே பைக்கில் பயணித்த நிலையில், விபத்தில் சிக்கி பெற்றோர் மற்றும் ஒரு மாத குழந்தை உட்பட 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உத்தரபிரதேசத்தின் பாஹ்ரைச் மாவட்டத்தில் துர்கேஷ் என்பவர் தனது மனைவி சகுந்தலா மற்றும் ஆறு குழந்தைகளுடன் ஒரே இருசக்கர வாகனத்தில் சொந்த ஊரான கதிஜோட் நோக்கி சென்று கொண்டிருந்தார். கோட்வாலி பகுதியில் இவர்கள் சென்ற வாகனம் மீது வேகமாக சென்ற பிக்கப் வாகனம் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் துர்கேஷ் மற்றும் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 6 குழந்தைகளையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகளின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே லக்னோவிற்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட ஒரு மாத குழந்தையான ராகினி மற்றும் 8 வயது சஜல் ஆகியோர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஒரே பைக்கில் 8 பேர் பயணித்தது எப்படி என்பது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
பாரதியார் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம்... காதல் ஜோடிக்கு குவியும் பாராட்டு!
கடலூரில் பரபரப்பு... ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீஸார் சோதனை!
சோகம்…'அங்கிள் பெர்ஸி' திடீர் மரணம்... இலங்கை கிரிக்கெட் அணி அதிர்ச்சி!
அதிர்ச்சி... மனைவி தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்... போலீஸில் சரண்!