
நாமக்கல் மாவட்டம் காவேரி ஆற்றில் மூன்று ஆண் சடலங்கள் மிதந்து வந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆற்றில் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது ஆற்றில் இருந்த ஆகாய தாமரைகளுக்கிடையே அடுத்தடுத்து 3 ஆண் சடலங்கள் மிதந்து கொண்டிருப்பது தெரியவந்தது. இந்த ஆண் சடலங்கள் ஒரு வார காலத்திற்கு முன்பே ஆற்றல் விழுந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது யாரேனும் கொலை செய்து இவர்களை ஆற்றில் வீசினார்களா? என்பது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இதனிடையே இது போன்று சடலங்கள் ஆற்றில் மிதந்து வரும்போது, தண்ணீர் மாசடையும் சூழல் இருந்து வருகிறது. எனவே தகவல் அறிந்தவுடன் சடலங்களை அகற்றவும், அந்த தண்ணீரை யாரும் குடிநீராக பயன்படுத்தாமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதனிடையே உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து பள்ளிபாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
பிஎஸ்சி படித்தவர்களுக்கு ரூ.1,40,000 சம்பளத்தில் விமான நிலையத்தில் வேலை!
லீக்கானது ‘லியோ' படத்தின் கதை... படக்குழுவினர் அதிர்ச்சி!
பெற்றோரிடம் ரூ.2 லட்சம் பேரம்; குழந்தையை விற்க முயற்சி- அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்
பிரபஞ்ச அழகிப் போட்டியில் புதுமை... 2 திருநங்கைகள் பங்கேற்பு!
எனக்கு அதைத் திருடுற பழக்கம் இருக்கு... நடிகை கீர்த்தி சுரேஷ்!