யானையைத் தொடர்ந்து முள்ளம்பன்றி... வனப்பகுதி வழியாக வந்த இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

முள்ளம்பன்றி
முள்ளம்பன்றி

கேரள மாநிலத்தில் முள்ளம்பன்றி வாலிபரை முட்களால் தாக்கிய சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. புலி, யானை, சிறுத்தை போன்ற விலங்குகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளின் அருகில் சுற்றித் திரிகின்றன. அவ்வப்போது இந்த விலங்குகள் மனிதர்களைத் தாக்குவதால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுக்கக் கோரி பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முள்ளம்பன்றி
முள்ளம்பன்றி

வனத்துறையினர் இதுவரை 2 புலிகளைக் கூண்டு வைத்துப் பிடித்துள்ளனர். மேலும் தண்ணீர் கொம்பன் என்ற யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட நிலையில், அது வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட போது உயிரிழந்தது. மற்றொரு மக்னா யானையை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வனத்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். இப்படி திரும்பிய பக்கமெல்லாம் வனவிலங்குகளால் கேரள மக்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது முள்ளம்பன்றியும் இணைந்து இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முள்ளம்பன்றி,  சிறுத்தை
முள்ளம்பன்றி, சிறுத்தை

பத்தனம்திட்டா மாவட்டம் அருகே உள்ள ரன்னி பகுதியில் 26 வயதான விஷ்ணு சசி என்ற இளைஞர் உத்திமூடு கிராமத்தை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள மலைப்பகுதி அருகே வந்தபோது திடீரென நன்கு வளர்ந்த முள்ளம்பன்றி ஒன்று சாலையைக் கடந்துள்ளது.

அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் முள்ளம்பன்றியின் மீது மோதியது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த முள்ளம்பன்றி, தற்காப்புக்காக தனது உடலில் இருந்து முட்களை விஷ்ணுவின் மீது வீசியுள்ளது. இதில் நெஞ்சு பகுதியில் முட்கள் குத்தியதால் வலியால் அலறித் துடித்த விஷ்ணு அங்கேயே சரிந்துள்ளார். ஆனால் முள்ளம்பன்றி அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.

இதனிடையே வலியில் துடித்துக் கொண்டிருந்த விஷ்ணுவை அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவில் பயணித்தவர்கள் உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு விஷ்ணுவின் உடலில் குத்தி இருந்த 15 முள்ளம்பன்றியின் முட்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.

இதையடுத்து தற்போது அவரது உடல்நிலை சீராக இருந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விஷ்ணுவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட முட்களை ஆதாரமாகக் கொண்டு வனத்துறையில் புகார் அளிக்க அவரது உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். இதனிடையே முள்ளம்பன்றியின் தாக்குதலில் இதே பகுதியில் கடந்த சில நாட்களில் மட்டும் ஒரு புலி மற்றும் ஒரு சிறுத்தை உயிரிழந்திருப்பதாக ரன்னி பகுதியின் வன அலுவலர் ஜெயக்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


இந்திய நிறுவனங்கள் 10% சம்பள உயர்வை அறிவிக்கும்... குஷிப்படுத்திய கருத்து கணிப்பு முடிவுகள்!

படப்பிடிப்பில் நடிகையை அடித்த இயக்குநர் பாலா...பரபரப்பு வீடியோ!

தமன்னாவுக்கே டஃப் கொடுக்கும் யானை... காவாலா பாட்டுக்கு கலக்கல் டான்ஸ்!

லீக்கானது ’வேட்டையன்’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ... போலீஸ் சீருடையில் மாஸாக வரும் ரஜினி!

அடடே மனோகர் திடீர் மறைவு... ஆழ்ந்த சோகத்தில் ரசிகர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in