போராட்டக் களத்தில் ரப்பர் குண்டு பாய்ந்து 21 வயது இளைஞர் பலி... விவசாயிகள் கொந்தளிப்பு!

உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங்
உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங்

ஷம்பு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 21 வயது விவசாயி ஒருவர் ரப்பர் குண்டு பாய்ந்ததில் உயிரிழந்த சம்பவம் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 9-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லிக்குள் நுழைய முடியாதவாறு ஷம்பு எல்லையில் போலீஸார் விவசாயிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். முன்னேற முயலும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் போலீஸார் அவர்களை தடுத்து வருகின்றனர். இருப்பினும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து முன்னேறி வருவதால், அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.

தொடரும் விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியில் பரபரப்பு
தொடரும் விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியில் பரபரப்பு

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 21 வயது இளம் விவசாயி சுப்கரன் சிங் மீது போலீஸார் சுட்ட ரப்பர் குண்டுகள் பாய்ந்ததில் அவர் மயங்கி விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த சுப்கரன் சிங்கை உடனிருந்தவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் காயம் காரணமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த தகவலை பாரதிய கிசான் சங்கத்தின் துணைத் தலைவரான குருவேந்தர் சிங் பலு உறுதி செய்துள்ளார். போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சுப்கரன் சிங் உயிரிழந்திருப்பதாகவும், அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உயிரிழப்பின் மூலமாக இதுவரை மூன்று விவசாயிகள் இந்த போராட்டத்தில் உயிரிழந்து உள்ளனர். கடந்த 16-ம் தேதி 79 வயது விவசாயி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனிடையே சுப்கரன் சிங் ரப்பர் குண்டுக்கு பலியான தகவலை ஹரியாணா போலீஸார் மறுத்துள்ளனர்.

”எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி இன்று விவசாயிகள் யாரும் போராட்டத்தில் உயிரிழக்கவில்லை. இது வெறும் வதந்தி. 2 போலீஸ்காரர்கள் மற்றும் ஒரு போராட்டக்காரர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்” என்று எக்ஸ் தள பக்கத்தில் ஹரியாணா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


பணிகள் நிறைவு... கருணாநிதி நினைவிடத்தை 26-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்!

ரூ.3000 கோடி ’மியாவ் மியாவ்’ போதைப்பொருள் மீட்பு... டெல்லி - புனே போதை வலைப்பின்னலில் கிறுகிறுத்த போலீஸார்

யூடியூபில் வீடியோக்களைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்... தாயும், சேயும் பலியான சோகம்!

ரம்ஜான் உணவுத் திருவிழாவை தடை செய்யுங்க... பெங்களூரு தமிழர்கள் திடீர் போர்க்கொடி!

தீபிகா-ரன்வீர் ஜோடிக்கு வாரிசு வந்தாச்சு... தீயாய் பரவும் தகவல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in