மெரினாவில் ரூ.1.8 கோடி போதைப் பொருள் பறிமுதல்! மாணவர்களுக்கு சப்ளை செய்தவர் கைது

மெரினாவில் ரூ.1.8 கோடி போதைப் பொருள் பறிமுதல்! மாணவர்களுக்கு சப்ளை செய்தவர் கைது
Updated on
1 min read

மெரினா அருகே ரூ.1.8 கோடி மதிப்புள்ள மெத்தபட்டமைன் போதைப்பொருளுடன் சுற்றி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்ய வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை, தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை செய்வதாக சங்கர் நகர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதுடன் இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தாம்பரம் முடிச்சூர் பகுதியை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் போதை பொருள் விற்பனை செய்வது தெரியவந்தது.

பின்னர் போலீஸார் சூர்யமூர்த்தி செல்போன் சிக்னலை வைத்து அவர் மெரினா கடற்கரையில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர் சங்கர் நகர் தனிப்படை போலீஸார் மெரினா காமராஜர் சாலையில் இருசக்கர வாகனத்தில் பையுடன் சுற்றி திரிந்த சூரியமூர்த்தியை கைது செய்து அவரது பையை சோதனை செய்தனர். அப்போது பையில் 5.8 கிலோ எடையுள்ள Methamphetamine என்ற போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.‌ பின்னர் போதை பொருளை பறிமுதல் செய்த போலீஸார் சூரியமூர்த்தியை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொடுங்கையூரை சேர்ந்த யூனஸ் என்பவரிடமிருந்து Methamphetamine போதைப்பொருளை வாங்கி சூரியமூர்த்தி தனது நண்பரான ஜாம்பஜாரை சேர்ந்த முகமது ரபிக் உடன் சேர்ந்து தாம்பரம், பழைய மகாபலிபுரம், கிழக்கு கடற்கரை சாலை, திருவல்லிக்கேணி மற்றும் மயிலாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஐடி ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான யூனஸ், முகமது ரபீக்கை ஆகியோரை சங்கர் நகர் போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 5.8 கிலோ Methamphetamine போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ. 1.8 கோடி என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in