உஜ்ஜைனி மகா காலேஸ்வர் கோயிலில் தீ விபத்து: 14 பூசாரிகள் படுகாயம்

உஜ்ஜைன் மகா காலேஸ்வர் கோயிலில் தீ விபத்து
உஜ்ஜைன் மகா காலேஸ்வர் கோயிலில் தீ விபத்து

மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் உள்ள மகா காலேஸ்வர் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பூசாரிகள் படுகாயமடைந்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் பிரசித்தபெற்ற மகா காலேஸ்வர் கோயில் உள்ளது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு இக்கோயில் கருவறையில் இன்று காலை 5.50 மணி அளவில் பாஸ்மா ஆரத்தி நடைபெற்றது. அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஹோலி பண்டிகையை கொண்டாட குலால் (வண்ணப்பொடி) வீசப்பட்டபோது தீ விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தில் தலைமை பூசாரி சஞ்சய் குரு உள்பட 14 பூசாரிகள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்தில் படுகாயமடைந்த பூசாரிகள் மருத்துவமனையில் அனுமதி
தீ விபத்தில் படுகாயமடைந்த பூசாரிகள் மருத்துவமனையில் அனுமதி

விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இதுகுறித்து உஜ்ஜைன் மாவட்ட கலெக்டர் நீரஜ் சிங் கூறுகையில், “'கர்ப்பகிரகத்தில் பாஸ்மா ஆரத்தியின் போது தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in