நீட் தேர்வு வினாத்தாள் கசிவு; பீகாரில் இதுவரை 13 பேர் கைது!

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது
நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது

கடந்த 5ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பீகாரில் 4 தேர்வர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்பட இதுவரை 13 பேரை அம்மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதில் குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்டம், கோத்ராவில் தேர்வு மையத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீட் தேர்வு வினாத் தாள் கசிவு
நீட் தேர்வு வினாத் தாள் கசிவு

பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக 4 தேர்வர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்பட இதுவரை 13 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணை, பீகார் காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த வழக்கை பாட்னா காவல் துறையின் சிறப்புக் குழு இதுவரை விசாரித்து வந்தது. இதில் நான்கு தேர்வர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பீகார் பொது சேவை ஆணையத்தின் (பிபிஎஸ்சி) ஆசிரியர் ஆட்சேர்ப்பு தேர்வு (டிஆர்இ)-3 வினாத்தாள் கசிவு வழக்கிலும் தொடர்புடையவர்.

பீகார் காவல் துறை
பீகார் காவல் துறை

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் உள்ளனர். அவர்களிடம் இருந்து குற்ற ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் நீட் தேர்வு வினாத்தாள்கள் மற்றும் அதற்கான பதில்களை தேர்வுக்கு முன்னதாக 35 விண்ணப்பதாரர்களுக்கு வழங்கியது தெரியவந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த அதிர்ச்சி...  சிவகாசியில் மற்றொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!

கனமழை: கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் 50 பேர் பலி!

உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி... அள்ளி வழங்கும் அமெரிக்கா!

மனைவி நடத்தையில் சந்தேகம்... 2 குழந்தைகளைக் கொன்று விட்டு கணவனும் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in