மாமல்லபுரத்தில் கடலில் குளித்த ஆந்திரா மாணவர்களில் 4 பேர் மாயம்.. ஒருவர் பலி!

மாமல்லபுரம் கடற்கரையில் குளித்த 9 பேர் கடலில் மூழ்கினர். 4 பேர் மீட்பு. 4 பேர் மாயம். ஒருவர் உயிரிழப்பு
மாமல்லபுரம் கடற்கரையில் குளித்த 9 பேர் கடலில் மூழ்கினர். 4 பேர் மீட்பு. 4 பேர் மாயம். ஒருவர் உயிரிழப்பு

மாமல்லபுரம் அருகே கடலில் குளித்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கலைக் கல்லூரி மாணவர்கள் 9 பேர் கடலில் மூழ்கினர். இதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாயமான 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

ஆந்திரா மாநிலம், அனந்தப்பூர் பகுதியைச் சேர்ந்த கலைக் கல்லூரி மாணவர்கள் 18 பேர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாவிற்காக இன்று வருகை தந்திருந்தனர். இதேபோல் நலகாம்பள்ளியைச் சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர்கள் 22 பேர் தனி குழுவாக மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர்.

அங்குள்ள பல்வேறு புராதனச் சின்னங்களையும் அவர்கள் தனித்தனியே பார்வையிட்டனர். இதையடுத்து 40 பேரும் கடற்கரைக்கு வருகை தந்தனர். கடல் சீற்றம் அதிகமாக இருந்த போதும், அதனை பொருட்படுத்தாத மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கடலில் இறங்கி குளித்துள்ளனர்.

மாணவர்களிடம் போலீஸார் விசாரணை
மாணவர்களிடம் போலீஸார் விசாரணை

அப்போது ராட்சத அலை கடலில் குளித்துக் கொண்டிருந்த 9 மாணவர்களை உள்ளே இழுத்து சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். அப்போது அங்கு புகைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் மணிமாறன், ராஜு, விஜி, சதீஷ் ஆகிய 4 பேரும் கடலில் சர்ஃபிங் போர்டு உதவியுடன் நீந்திச் சென்று அலைகளில் சிக்கி உயிருக்கு போராடிய 4 மாணவர்களைக் காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தனர். சிறிது நேரத்தில் நலகாம்பள்ளியைச் சேர்ந்த விஜய் (24) என்ற மாணவரின் உடல் கரை ஒதுங்கியது.

மாமல்லபுரம் கடற்கரை
மாமல்லபுரம் கடற்கரை

இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கும், மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படகு மூலம் மாயமான மாணவர்கள் மவுனிஷ் (18), பார்த்துஷா (19), சேசாரெட்டி (25), பெத்துராஜ் (26) ஆகிய 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலில் மூழ்கியதில் காப்பாற்றப்பட்ட 4 மாணவர்களுக்கும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் பலமுறை எச்சரித்தும் மாணவர்கள் கேட்காமல் கடலில் இறங்கியதால் இந்த விபத்து நேர்ந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

2 தொகுதிகள் தான்... திமுக கறார்: பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக நிர்வாகிகளுடன் திருமா ஆலோசனை!

வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

பேருந்தில் நடந்த பயங்கர சம்பவம்.. நடிகை ஆண்ட்ரியா அதிர்ச்சி பேட்டி!

தபால் ஓட்டு... சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கிய அறிவிப்பு!

போதையில் தள்ளாடும் தமிழகம்... அரசின் மெத்தனப்போக்கு காரணமா? ஒன்று சேரும் எதிர்கட்சிகள்!?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in