யூடியூபர் இர்ஃபான் மீது கிளம்பிய மதவெறுப்பு... பதிலடி என்ன தெரியுமா?

யூடியூபர் இர்ஃபான்
யூடியூபர் இர்ஃபான்

யூடியூபர் இர்ஃபான் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில் அவர் மீது நெட்டிசன் ஒருவர் இஸ்லாம் மத வெறுப்பை கக்கியிருக்கிறார் இதனால், கடுப்பான இர்ஃபான் அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

ரோட்டுக்கடை முதல் பிரபல நட்சத்திர ஹோட்டல் உணவகங்கள் வரை சுவையான உணவு வகைகளைத் தேடித்தேடி சென்று உணவுகளை சுவைத்து தனது யூ-ட்யூப் சேனலில் அது குறித்த வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் இர்ஃபான்.

இவரது யூ-ட்யூப் சேனலை மில்லியன் கணக்கானவர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். உணவு வீடியோக்கள் மூலம் புகழ்பெற்றவர் இப்போது படங்கள் வெளியாகும் போது, பிரபலங்களுடன் உரையாடி பட புரோமோஷன் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

விஜய் டிவியில் நாளை முதல் ஒளிபரப்பாக இருக்கும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனிலும் போட்டியாளராகப் பங்கேற்கிறார் இர்ஃபான். இந்நிலையில், அவர் மீது மத ரீதியாக நெட்டிசன்கள் வெறுப்பு பரப்பி வருகின்றனர்.

அவர் பதிவிட்ட ’பிஸ்மில்லா பீஃப் பிரியாணி’ என்ற கடையின் உணவு ரிவிவ்யூ வீடியோவின் கீழ் ஒருவர், இர்ஃபான் எப்போதுமே இஸ்லாம் கடைகளை மட்டும்தான் புரோமோட் செய்கிறார் என்றும் மற்ற கடைகளை அவர் புரோமோட் செய்வதில்லை என்றும் கூறி இருக்கிறார். இதற்கு இர்ஃபான், ’என் மதம் சார்ந்த கடைகளை மட்டும் இல்லை, ’டிஃபின் சாஸ்த்ரா’, ‘மாப்பிளை ரெஸ்ட்டாரன்ட்’ என மற்ற கடைகளையும் நான் புரோமோட் செய்து கொண்டு தான் இருக்கிறேன். ஆனால், இந்த வீடியோவில் மட்டும் இப்படி ஒரு கமென்ட்.

பிரச்சினை என்கிட்ட இல்லை. எல்லா விஷயத்துலேயும் மதம், வெறுப்பை கக்கற உன்கிட்ட தான் பிரச்சினை’ என கோபத்தோடு கூறியுள்ளார். மேலும், இந்த நாட்களில் நிறைய மதம் சார்ந்து வெறுப்புகள் வருகிறது என்றும் தன் வருத்தத்தை பதிவு செய்துள்ளார் இர்ஃபான்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியாவை விட்டு வெளியேறுவோம்... டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் - அப் அதிரடி கருத்து

கர்நாடகாவில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு... பிரகாஷ் ராஜ், ராகுல் டிராவிட் ஆகியோர் வாக்குகளை செலுத்தினர்

கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு... ராகுல், சுரேஷ்கோபி, சசி தரூர், தேறுவார்களா?

13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது... ஆர்வமுடன் திரண்ட வாக்காளர்கள்!

பாலிவுட் போனதும் ஆளே மாறியாச்சு... கீர்த்தி சுரேஷின் செம ஹாட் புகைப்படங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in