"புகைப்பிடிக்கும் வாசனை எனக்குப் பிடிக்கும். சிகரெட் மட்டும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கவில்லை என்றால் நானும் புகைப்பிடிப்பவளாக மாறியிருப்பேன்” என நடிகை வித்யாபாலன் கூறியிருக்கிறார்.
கேரளாவைச் சேர்ந்த நடிகை வித்யாபாலன் சிறுவயதில் இருந்தே மும்பையில் வளர்ந்தார். நடிகையானதும் பாலிவுட்டிலேயே அதிக படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தினார். தமிழில் அஜித்துடன் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்துள்ளார். திரையுலகம் கதாநாயகிகளிடம் வழக்கமாக எதிர்பார்க்கும் ஜீரோ சைஸ் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறி கவனம் ஈர்த்தார் வித்யாபாலன்.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில், “சிறுவயதில் இருந்தே புகைப்பிடிக்கும் வாசனை எனக்குப் பிடிக்கும். சிகரெட் பிடிப்பது உடல் நலனுக்கு தீங்கு இல்லை என்ற சூழல் வந்தால் நிச்சயம் நானும் புகைப்பிடிப்பவளாக மாறியிருப்பேன்” என்று கூறி அதிர வைத்துள்ளார்.
“கல்லூரி காலங்களில் பேருந்து நிலையத்தில் புகைப்பிடிப்பவர்கள் அருகில் நான் இருப்பதை விரும்புவேன். ’தி டர்ட்டி பிக்சர்’ படத்திற்காக என்னை அணுகிய போது எனக்கு புகைப்பிடிக்கத் தெரியும் என்பதால் தயங்காமல் ஒத்துக் கொண்டேன். அந்தக் காட்சிகளிலும் நான் உண்மையாக நடித்தேன்.
அந்தப் படத்திற்குப் பிறகு, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று சிகரெட் பிடிப்பதை வழக்கமாக்கி கொண்டேன். அந்த சமயத்தில் புகைப்பிடிப்பதன் மீது ஆர்வம் அதிகம் இருந்தது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் வாசிக்கலாமே...
இந்தியாவை விட்டு வெளியேறுவோம்... டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் - அப் அதிரடி கருத்து
கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு... ராகுல், சுரேஷ்கோபி, சசி தரூர், தேறுவார்களா?
13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது... ஆர்வமுடன் திரண்ட வாக்காளர்கள்!
பாலிவுட் போனதும் ஆளே மாறியாச்சு... கீர்த்தி சுரேஷின் செம ஹாட் புகைப்படங்கள்!
’