போய் படிங்க பா... ப்ளீஸ் பா படிங்க பா... மாணவர்களுக்காக வீடியோ வெளியிட்ட நடிகர் சித்தார்த்!

நடிகர் சித்தார்த்
நடிகர் சித்தார்த்

பள்ளிகளில் தேர்வு தொடங்கி விட்டதால் மாணவர்கள் சமூக வலைதளங்களில் நேரத்தை வீணாக்கக் கூடாது என்று நடிகர் சித்தார்த் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் சித்தார்த்
நடிகர் சித்தார்த்

இயக்குநர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சித்தார். நடிகர், திரைக்கதை எழுத்தாளர், பாடகர், உதவி இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரம் எடுத்துள்ள சித்தார்த் இந்தி மற்றும் ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்த 'சித்தா' படம் பரவலான வரவேற்பைப் பெற்றது. தற்போது 'இந்தியன் 2' மற்றும் 'ஷைத்தான் கா பச்சா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த், மத்திய அரசுக்கு எதிராகவும், பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டு பரவலான கவனத்தை ஈர்த்தவர்.

இவர் இன்ஸ்டாகிராமில் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரெக்வஸ்ட் வந்து கொண்டேயிருக்கிறது. என்னுடைய போஸ்டுக்கு சித்தார்த் கமெண்ட் செய்தால் நான் உடனே படிக்கச் போய் விடுவேன், தேர்வு எழுதச் சென்று விடுவேன், என்னுடைய எதிர்காலத்தை பார்த்துக்கொள்வேன், என்னுடைய நாட்டைப் போய் காப்பாத்துவேன் இப்படி பல விதமாக பதிவுகள் அனுப்புகிறார்கள்.

இவை அனைத்திற்கும் முதலில் நீங்கள் சோசியல் மீடியாவில் இருந்து வெளியில் சென்று உங்கள் போனை சுவிட்ச் ஆஃப் செய்ய வேண்டும். பிறகு போய் படித்து விட்டு தேர்வை எழுத வேண்டும். இது ஒரு அபத்தமான டிரெண்ட். நான் உங்களுடைய போஸ்டுக்கு கமெண்ட் செய்ய மாட்டேன். போய் படிங்க பா... ப்ளீஸ் பா படிங்க பா" என்று நடிகர் சித்தார்த் பகிர்ந்துள்ளார்.

மேலும் அதற்கு கேப்ஷனாக "இந்த ரீல் வீடியோவை நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் இன்னும் சோசியல் மீடியாவில் தான் இருக்குறீர்கள். உபயோகமாக எதுவும் செய்யவில்லை என அர்த்தம்” எனவும் போஸ்ட் செய்துள்ளார்.

அவரின் இந்த எச்சரிக்கை வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பதிவு செய்த சில மணி நேரங்களில் 8 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


இந்திய நிறுவனங்கள் 10% சம்பள உயர்வை அறிவிக்கும்... குஷிப்படுத்திய கருத்து கணிப்பு முடிவுகள்!

படப்பிடிப்பில் நடிகையை அடித்த இயக்குநர் பாலா...பரபரப்பு வீடியோ!

தமன்னாவுக்கே டஃப் கொடுக்கும் யானை... காவாலா பாட்டுக்கு கலக்கல் டான்ஸ்!

லீக்கானது ’வேட்டையன்’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ... போலீஸ் சீருடையில் மாஸாக வரும் ரஜினி!

அடடே மனோகர் திடீர் மறைவு... ஆழ்ந்த சோகத்தில் ரசிகர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in