இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... பிரபல நகைச்சுவை நடிகர் கைது!

பினு பி.கமால்
பினு பி.கமால்

இளம்பெண்ணிடம் அத்துமீறியதற்காக கேரள நகைச்சுவை நடிகர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் சில மலையாளப் படங்களிலும் நடித்து பிரபலமான நகைச்சுவை நடிகர் பினு பி.கமால். கேரளா மாநிலம், கொல்லம் அருகே நிலமேல் பகுதியைச் சேர்ந்த இவர், நேற்று மாலை திருவனந்தபுரத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். பின்னர் நிலமேலுக்கு கேரளா அரசு பேருந்தில் புறப்பட்டுச் சென்றார். அவரது இருக்கைக்கு அருகில் ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தார்.

திருவனந்தபுரம் அருகே வட்டப்பாறை என்ற இடத்தில் பேருந்து சென்ற போது, பினு கமால் அந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சலிட்டார். உடனே, ஓட்டுநர் பேருந்தை நிறுத்த, பினு கமால் பஸ்சில் இருந்து இறங்கி ஓடியுள்ளார்.

பினு பி.கமால்
பினு பி.கமால்

அதைப் பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அவரை விரட்டி சென்றனர். இந்த சமயத்தில் வட்டப்பாறை போலீஸாரும் அங்கு வந்தனர். அவர்களும் பொதுமக்களுடன் சேர்ந்து பினு கமாலை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணைக்குப் பிறகு பினு கமாலை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தீர்மானித்து உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in