முன்னாள் பிரதமரின் பயோபிக்கில் நடிக்கும் அமிதாப்பச்சன்?

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பயோபிக் சீரிஸ் உருவாக இருக்கிறது. இதில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நரசிம்ம ராவ்
நரசிம்ம ராவ்

பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்களின் பயோபிக் படங்களாகவும், இப்போதைய ஓடிடி தலைமுறையில் தொடர்களாகவும் வெளி வந்துகொண்டிருக்கிறது. அப்படி வெளிவந்த பட படங்கள் ரசிகர்களுக்கும் பிடித்தமானதாக இருந்தது. இந்த வரிசையில் இன்னொரு பயோபிக் உருவாக இருக்கிறது. இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா, மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலம் பொருளாதார வளர்ச்சி புதிய சகாப்தத்தை கண்டதாக கூறிய பிரதமர் மோடி இவருக்கு இந்த விருது அறிவிப்பதில் பெருமை என தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.

இப்பொழுது, நரசிம்மராவின் பயோபிக் தொடராக உருவாக இருக்கிறது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆஹா ஸ்டுடியோவுடன் இணைந்து இதனைத் தயாரிக்கிறது. இதற்கு ’ஹாஃப் லயன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

‘ஹாஃப் லயன்’  புத்தகம்
‘ஹாஃப் லயன்’ புத்தகம்

‘ஹாஃப் லயன்’ தொடர் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் உட்பட பல மொழிகளில் இது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரகாஷ் ஜா இயக்கும் இப்படத்தில் நரசிம்மராவாக நடிகர் அமிதாப்பச்சன் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் வளர்ச்சியில் பிரதமர் நரசிம்மராவின் பங்கு அளப்பறியது. 1991 முதல் 1996 வரை பிரதமராக அவரது பதவிக்காலத்தில் அவருடைய பங்களிப்பைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் இந்தத் தொடர் இருக்கும் எனத் தெரிகிறது. ‘ஹாஃப் லயன்’ என்ற தலைப்பில் வினய் சீதாபதி எழுதிய புத்தகத்தைத் தழுவி, அதே தலைப்பில் இந்தத் தொடர் எடுக்கப்பட இருக்கிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.

இதையும் வாசிக்கலாமே...

திருக்கடையூரில் தினகரன்... 60 வயது நிறைவையொட்டி மனைவியுடன் வழிபாடு!

பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு சங்கீத நாடக அகாடமி விருது... குவியும் வாழ்த்து!

ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார் அனீஷ் சேகர்... அதிர்ச்சியில் தமிழ்நாடு அரசு!

கட்சி மாறியதால் காட்சிகள் மாறுது... விஜய்வசந்த் டார்கெட்... கன்னியாகுமரி சீட் கன்பார்ம்... விஸ்வரூபமெடுக்கும் விஜயதரணி!

பயங்கரம்... கண்களில் மிளகாய் பொடி தூவி பாஜக எம்.பியின் நண்பர் வெட்டிக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in