டவலுடன் பாடகி ஜோனிடா காந்தி குளியலறையில் இருந்து வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இந்த விஷயத்துக்குதான் ரசிகர்கள் அவரைத் திட்டி வருகின்றனர்.
’அரபிக்குத்து’, ‘செல்லம்மா’ போன்ற பாடல்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் இணையத்தில் டிரெண்டிங் பாடகியாக வலம் வருகிறார் ஜோனிடா காந்தி. டெல்லியில் பிறந்து வளர்ந்தவரான ஜோனிடா, ரஹ்மான் இசையில் ’மன மன மென்டல் மனதில்’ பாடல் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ’காற்றுவெளியிடை’ ’வேலைக்காரன்’, ’டாக்டர்’ போன்ற படங்களில் இவர் பாடிய பாடல்கள் ஹிட்டானது. குறிப்பாக, பாடல்களுக்கான புரோமோ வீடியோவில் திரையில் அனிருத்துடன் இவர் போடும் நடனமும், இருவரது குறும்பு சேட்டைகளும் ரசிகர்களுக்குப் பிடித்த ஒன்றாகவே இருக்கிறது.
பாடல் மட்டுமல்லாது, ஃபிட்னஸிலும் செம கில்லி ஜோனிடா. சமூகவலைதளங்களில் இவர் பகிரும் புகைப்படங்களையும் ரீல்ஸையும் பார்த்து எப்போது நடிக்கப் போகிறீர்கள் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவாக உள்ள ’வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகி ஆகிறார் ஜோனிடா.
’சூரரைப் போற்று’ படப்புகழ் கிருஷ்ண குமார் கதாநாயகனாக நடிக்கிறார். விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராக இருந்த விநாயக் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பாடல், படம் மட்டுமல்லாது இசை நிகழ்ச்சிகளிலும் ஜோனிடா பிஸி. இப்படியான இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக ஜோனிடா தயாரான வீடியோவை ஜாலி ரீல்ஸாக பகிர்ந்துள்ளார். அதாவது, குளியலறையில் இருந்து நிகழ்ச்சிக்குத் தயாராகிறேன் என அவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவிற்குக் கீழே ரசிகர்கள், ‘இப்படிச் செய்யாதீர்கள்’, ‘இது மோசமான நடத்தை’ என அவரை விளாசி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!
தமிழக அரசின் ஆளுநர் உரை... ஊசிப்போன பண்டம்... எடப்பாடி பழனிசாமி பேட்டி!