இன்ஸ்டா போஸ்ட்டை அவசர அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!

செலினா கோம்ஸ்
செலினா கோம்ஸ்

அமெரிக்க பாடகி செலினா கோம்ஸ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்களுக்காக ரசிகர்கள் மத்தியில் கடுமையான உடை கேலியையும் உடல் கேலியையும் எதிர்கொண்டு இருக்கிறார். இதனால், அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்த உடனேயே அதை நீக்கி இருக்கிறார் செலினா.

பிரபல நடிகை, பாடகி, தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர் செலினா கோம்ஸ். இவர் தனது சமூகவலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இணையத்தில் பலரும் அதை தவறான நோக்கத்துடன் வைராலாக்க ஆரம்பிக்க, பகிர்ந்த உடனேயே அதை அவசர அவசரமாக நீக்கியிருக்கிறார் செலினா.

31 வயதாகும் நடிகை செலினா லாஸ் ஏஞ்சலில் உள்ள தனது இல்லத்தில் ரிலாக்ஸாக டீப் லோநெக்கில், ஸ்ட்ராப் இல்லாத கறுப்பு நிற ஆடையை அணிந்து செல்ஃபி எடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

அவர் எடுத்த புகைப்படத்தில், மார்பு பகுதியில் உடை சற்றே விலகி இருந்திருக்கிறது. இதை கவனித்த ரசிகரள், இந்தப் புகைப்படத்தை வைரலாக்கியது மட்டுமல்லாது அவரை உருவ கேலியும் செய்ய ஆரம்பித்து விட்டனர். பதிவேற்றிய பிறகு இந்தத் தவறை கவனித்த செலினா உடனடியாக அந்தப் புகைப்படங்களை அவசரமாக தனது பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறார்.

கேலி செய்கிறவர்கள் ஒருபுறம் என்றால், இன்னொரு பக்கம் செலினாவுக்காக ஆதரவு கொடுக்கும் ரசிகர்களும் அதிகமாகி இருக்கிறார்கள். குறிப்பாக, ஆட்டோ இம்யூன் நோயால் அவதிப்பட்டு வரும் செலினாவின் உடல்நிலையை பொதுவில் எடுத்துச் சொல்லி, ‘செலினா எப்போதும் தன் உடல்நிலை பற்றியும் அதிலிருந்து தான் மீண்டு வர இருப்பதையும் வெளிப்படையாகச் சொல்லி தைரியம் கொடுப்பவர். இதுபோன்ற சமயத்தில் அவரை கேலி செய்யக் கூடாது’ எனவும் கூறி வருகின்றனர்.

செலினா தனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சைகள் உட்பட நோயுடன் தனது பயணத்தைப் பற்றியும், அது தனது மன ஆரோக்கியத்தை எவ்வாறு பாதித்தது என்பதைப் பற்றியும் பொதுவெளியிலும் இணையவெளியில் ரசிகர்களுடன் உரையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in