ஊரே கொண்டாடுச்சு... யார் கண் பட்டுச்சோ... திருமணத்தை அறிவித்த நிலையில் காதலைக் கைவிட்ட லெஸ்பியன் தோழிகள்!

அஞ்சலி சக்ரா மற்றும் சூஃபி மாலிக்
அஞ்சலி சக்ரா மற்றும் சூஃபி மாலிக்

ஐந்து வருடங்களாக காதலித்து வந்த தன்பாலின ஈர்ப்பாளர்களான அஞ்சலி சக்ரா மற்றும் சூஃபி மாலிக் இருவரும் தங்களது திருமணத்தை அறிவித்திருந்த நிலையில், துரோகம் காரணமாக தங்களது திருமண அறிவிப்பை ரத்து செய்து விட்டு, இருவரும் பிரேக்கப் செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்குக் காரணம் திருமணத்திற்கு முன்னால், சூஃபி செய்த துரோகம் என்றும் அறிவித்துள்ளனர்.

லண்டனைச் சேர்ந்த பிரபல சமூகவலைதள இன்ஃபுளூயன்சர்கள் அஞ்சலி சக்ரா மற்றும் சூஃபி மாலிக். தன்பாலின ஈர்ப்பாளர்களான இவர்கள் இருவரும் கடந்த ஐந்து வருடங்களாகக் காதலித்து வந்தனர். இருவரும் தங்கள் காதல் தருணங்களையும், ரொமான்ஸ் பக்கங்களையும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளிப்படையாக பகிர்ந்து வந்தனர். அடுத்த சில வாரங்களில் இவர்களது திருமணம் நடைபெற இருந்த நிலையில், தங்கள் உறவில் இருந்து தாங்கள் பிரிந்து விட்டதாக இருவரும் அடுத்தடுத்து ஒரே நேரத்தில் அறிவித்து இருக்கிறார்கள். இது அவர்களது ஃபாலோயர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து சூஃபி தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘எங்களது திருமணத்திற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மன்னிக்க முடியாத குற்றத்தையும் துரோகத்தையும் அஞ்சலிக்கு நான் செய்து விட்டேன். இது அவரை கடுமையாக பாதித்துள்ளது. எனது குடும்பத்தையும் நண்பர்களையும் கூட வருத்தப்பட வைத்து விட்டேன். அதனால், இது பிரிய வேண்டிய நேரம். எங்களைப் புரிந்து கொண்டு எங்களது பிரைவசிக்கு மதிப்புக் கொடுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

அஞ்சலியும் இது குறித்து, ‘கடந்த ஐந்து வருடங்களாக நானும் சூஃபியும் அழகான காதல் தருணங்களில் திளைத்து வந்தோம். இத்தனை நாட்கள் நீங்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. ஆனால், சூஃபி செய்த துரோகத்தால் இப்போது எங்கள் திருமணத்தை நிறுத்த இருக்கிறோம். நாங்கள் இருவரும் பிரியவும் முடிவு செய்துள்ளோம். இதற்காக சூஃபி மீது நீங்கள் எந்தவிதமான நெகட்டிவிட்டியையும் காண்பிக்க வேண்டாம்.

அவளுடன் இருந்த காலத்தை எப்போதும் மகிழ்ச்சியுடன் நினைத்து பார்ப்பேன். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in