அனிமேஷன் வடிவில் ‘பாகுபலி’யின் முன்கதை... கட்டப்பா துரோகி ஆனது ஏன்?

பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்'
பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்'

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படத்தின் முன் கதை , ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. அனிமேஷன் வடிவில் உருவாகியுள்ள இந்த சீரிஸ் மே 17 அன்று வெளியாகும் என்பது ரசிகர்களை மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படம் மொழி கடந்து பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்தது. நடிகர்கள் பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் எனப் பலரும் நடித்திருந்தார்கள். இதில் கட்டப்பா பாகுபலியை முதுகில் குத்தி கொன்று துரோகி ஆவார். படத்தின் இரண்டு பாகங்களும் ஹிட்டடித்த நிலையில், இதன் முன்கதை அனிமேஷன் வடிவில் வெளியாக உள்ளது.

பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்'
பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்'

'பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தத் தொடர் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மே 17 அன்று ஒளிபரப்பாக உள்ளது. இதன் டீசர் தற்போது வெளியாகவுள்ளது.

மகிழ்மதி சாம்ராஜ்யம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலும் இந்த அனிமேஷன் தொடரில் காட்டப்படவுள்ளது. ரத்கதேவன் பல ராஜ்யங்களை அழித்துவிட்டு கடைசியாக கைப்பற்ற நினைக்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா, பாகுபலியும் பல்லாலதேவாவும் சேர்ந்து ரத்கதேவனிடமிருந்து தங்கள் ராஜ்ஜியத்தை எப்படிக் காப்பாற்றினார்கள் என்பது பற்றிதான் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது. குறிப்பாக, கட்டப்பா ஏன் துரோகி ஆனார் என்பதையும் இதில் பார்க்க முடியும்.

பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்'
பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்'

இந்த சீரிஸை ராஜமௌலி மற்றும் சரத் தேவராஜன் இணைந்து இந்த உருவாக்கி இருக்கிறார்கள். ’பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் ஆயிரம் கோடி வசூலைக் கடந்து சினிமா உலகை திரும்பி பார்க்க வைத்தது. இப்போது அதன் முன்கதை அனிமேஷன் தொடராக எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதையும் வாசிக்கலாமே...
உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?

நடிகை ஸ்ரீதேவியுடன் புகைபிடிக்கும் ராம்கோபால் வர்மா... மார்ஃபிங் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்... வைரலாகும் வீடியோ!

காதல் விவகாரத்தில் விபரீதம்... 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் மரணம்; சீரம் இன்ஸ்டிடியூட் மீது பெற்றோர் வழக்குப்பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in