
ஓடிடி தளங்களின் முன்னோடியாக உள்ள நெட்ஃப்ளிக்ஸ் தளம் பயனாளர்களிடமிருந்து பெரும் கட்டணத்தை, உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஓடிடி எனப்படும் தளங்களில் முன்னோடியாக இருந்து வருகிறது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பயனாளர்கள் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சிறப்பு திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை கண்டு களித்து வருகின்றனர்.
கொரோனா காலகட்டத்தின் போது உலகமே வீடுகளில் முடங்கிய நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் பயனாளர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. மேலும் ஏராளமான முன்னணி நட்சத்திரங்களை கொண்டு புதிய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தயாரித்து நெட்ஃப்ளிக்ஸ் தளம் லாபத்தை ஈட்டி வந்தது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில் மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். தற்போது ஓடிடி தளங்களின் பயனாளர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக கடந்த சில மாதங்களாக பொருளாதார நிபுணர்கள் கணித்து வந்தனர்.
இந்நிலையில் ஒரே கணக்கை வைத்துக்கொண்டு பலர் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை கண்டறிந்து அந்நிறுவனம் அதையும் தடுத்து நிறுத்தி உள்ளது. தற்போது அதிரடியாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்திற்கான வருடாந்திர கட்டணத்தை 10 டாலரில் இருந்து 12 டாலர்களாக உயர்த்த அந்நிறுவனம் முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இருப்பினும் தரமான நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் என்று விரும்புகிற பயனாளர்களுக்கான தளமாக நெட்ஃப்ளிக்ஸ் இருந்து வருவதால், அதன் இந்த புதிய முடிவால் வர்த்தக ரீதியில் பெரிய பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவால், அதன் வருடாந்திர லாபம் பெருகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்... தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!
பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!
அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!
அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!