
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பயோபிக் திரைப்படம் அக்.27-ம் தேதி வெளியாகிறது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி. பாஜகவின் மூத்த தலைவரான இவரைப் பற்றி 'கட்கரி' என்ற பெயரில் மராத்தி மொழியில் பயோபிக் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர், போஸ்டர் ஏற்கெனவே வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கட்கரியின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள், இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகள் அமைத்ததில் அவரது பங்கு உள்ளிட்டவை குறித்து படத்தில் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை அனுராக் பூசாரி இயக்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், " நிதின் கட்கரியின் அரசியல் வாழ்க்கை நிச்சயம் குறிப்பிடத்தக்கது. பயிற்சி, அதிக வாக்கு, முழுமையான சிந்தனை, சாலை மேம்பாடு, கட்கரியின் ஆளுமையின் பல்வேறு பக்கங்களை பொதுமக்கள் அறிவார்கள்.
சமூக நலனில் நாட்டம் கொண்ட இந்த தலைவரின் அரசியல் பயணம் பலருக்குத் தெரியும், ஆனால்,அவரது தனிப்பட்ட வாழ்க்கையும், இளமையும் சமமாக சுவாரஸ்யமானவை. அப்படிப்பட்ட தலைவரின் வாழ்க்கைப் பயணத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் முயற்சி இந்தப் படத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று இயக்குநர் அனுராக் பூசாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த படம் அக்.27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்
விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!