கருணாநிதியை வைத்து இளையராஜா குடும்பத்தை மறைமுகமாக வம்பிழுத்த வைரமுத்து... பரபர ட்வீட்!

கருணாநிதியை வைத்து இளையராஜா குடும்பத்தை மறைமுகமாக வம்பிழுத்த வைரமுத்து... பரபர ட்வீட்!

காப்புரிமை தொடர்பான வழக்கில் இளையராஜா- வைரமுத்து இடையிலான போரும் பேசு பொருளாகி இருக்கிறது. இந்தச் சூழலில் மறைமுகமாக இளையராஜா குடும்பத்தை மீண்டும் ட்வீட் போட்டு வம்பிழுத்திருக்கிறார் வைரமுத்து.

தான் இசையமைத்த இசை தனக்குத்தான் சொந்தம் என இளையராஜா காப்புரிமை வழக்கை நீதிமன்றத்தில் நடத்தி வருகிறார். ’பாடலுக்கு வரிகள் எழுதிய பாடலாசிரியரும், பாடகர்களும் இதே போன்று சொந்தம் கொண்டாடினால் என்ன செய்வது?’ என நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பின்னர், இந்த விஷயம் பொது வெளியில் மீண்டும் விவாதமானது.

இளையராஜா
இளையராஜா

இதனை அடுத்து, வைரமுத்து படவிழா ஒன்றில் ‘இசை பெரிதா? மொழி பெரிதா?’ என்று அடுத்த விவாதத்தை தொடங்கி வைத்து இளையராஜா பாடல்களில் தனக்கும் உரிமை உண்டு என்று மறைமுகமாக சொன்னார். இதனால் வைரமுத்துவை இளையராஜாவின் தம்பி, இசையமைப்பாளர் கங்கை அமரன் கடுமையாக விமர்சித்து பேசினார்.

அதற்கடுத்து, இந்த விஷயத்தில் மக்கள் தனக்காக ஆதரவு கொடுக்க ஆரம்பித்துவிட்டதால் தான் இனி அமைதியாக இருக்கப் போகிறேன் என்று சொன்னார் வைரமுத்து. ஆனால் இப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை முன்வைத்து மறைமுகமாக இளையராஜா- கங்கை அமரனை வம்பிழுத்திருக்கிறார் வைரமுத்து. வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில், ‘கலைஞருக்கும், அதிமுகவிலிருந்து திமுகவில் வந்துசேர்ந்த ஒரு முக்கியப் புள்ளிக்கும் இடையில் நடந்த உரையாடல் எனக்கு வாய்மொழியாக வந்தது.

தயக்கத்தோடு கலைஞரையே கேட்டு உறுதி செய்தது சொற்கள் மாறியிருக்கலாம். சொன்னபொருள் இதுதான் ‘வைரமுத்துவை ரொம்ப நம்பாதீங்க தலைவரே!’

‘ஏன்? எதனால?’ ‘அவரு உங்களப் புகழ்ந்து பேசுறாரே தவிர ஜெயலலிதாவ எப்பவும் திட்ட மாட்டேங்குறாரு’ (கலைஞர் சிறு சிந்தனைக்குப் பிறகு) ‘நீ அங்க இருந்து இங்க வந்திருக்க அங்க இருந்தபோது என்னத் திட்டுன. இங்க இருந்து அந்த அம்மாவத் திட்டுற வைரமுத்து எப்பவும் இடம் மாறல ஜெயலலிதா வைரமுத்துக்கு எதிரியும் இல்ல அவரு தமிழுக்காக நம்மகூட நிக்கிறாரு இன்னொண்ணு அவரு யாரையும் திட்டமாட்டாரு; அது அவரு இயல்பு’ கோள் சொன்னவர் குறுகிப்போனார் இப்படித்தான் கேடுகள் ஈட்டி எறியும்போதெல்லாம் கேடயமாவது சத்தியம்!’ என்று கூறியுள்ளார்.

இது இளையராஜாவிற்கான வம்பிழுப்பா அல்லது ஸ்டாலினுக்கு தன்னைப் பற்றி சூசகமாக சுட்டிக்காட்டிக்காட்டுகிறாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த அதிர்ச்சி...  சிவகாசியில் மற்றொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!

கனமழை: கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் 50 பேர் பலி!

உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி... அள்ளி வழங்கும் அமெரிக்கா!

மனைவி நடத்தையில் சந்தேகம்... 2 குழந்தைகளைக் கொன்று விட்டு கணவனும் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in