ஸ்ரீதேவி ஆசையாய் வாங்கிய முதல் வீடு... வாடகைக்கு விடும் மகள் ஜான்வி கபூர்!

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

சென்னையில் நடிகை ஸ்ரீதேவி ஆசையாய் வாங்கிய முதல் வீட்டை அவரது மகள் ஜான்வி கபூர் வாடகைக்கு விடுவதாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பின்பு, 1996-ல் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இருமகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜான்வி தற்போது பாலிவுட், டோலிவுட் என படங்களில் நடித்து வருகிறார்.

ஸ்ரீதேவி இல்லம்
ஸ்ரீதேவி இல்லம்

ஸ்ரீதேவி உச்சநட்சத்திரமாக திகழ்ந்தபோதே நிறைய சொத்துகள் வாங்கி குவித்தார். அதில் சென்னையில் கடற்கரையோரம் வாங்கிய பங்களா மிக முக்கியமானது. ஏனெனில், சென்னையில் அவர் வாங்கிய முதல் சொத்து இதுதான். ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின்னர் பல கோடிகளை போட்டு அந்த வீட்டை மறுசீரமைத்த போனி கபூர், தனது சென்னை அலுவலகமாகவும் அதை பயன்படுத்தி வந்தார்.

இந்த வீட்டில் ஸ்ரீதேவியின் மறக்க முடியாத பல தருணங்கள், யாரும் அதிகம் பார்த்திடாத ஸ்ரீதேவியின் புகைப்படங்கள், அவர் வரைந்த ஓவியங்கள் ஆகியவை உள்ளது. இந்த வீட்டைத்தான் வாடகைக்கு விட முடிவு செய்திருக்கிறார் அவரது மகள் ஜான்வி கபூர். இதற்காக, Airbnb என்ற நிறுவனத்துடன் கைக்கோத்துள்ளார். அந்நிறுவனம், 'Live like Bollywood star Janhvi Kapoor' என்ற கேட்டகிரியை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்ரீதேவி இல்லத்தில் உள்ள புகைப்படங்கள்...
ஸ்ரீதேவி இல்லத்தில் உள்ள புகைப்படங்கள்...

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த வீட்டில் ஒருநாள் தங்கலாம். இவர்கள் ஒரு பெட்ரூம், பாத்ரூம் எடுத்துக் கொள்ள முடியும். அவர்களுடன் உரையாடும் ஜான்வி தனக்குப் பிடித்த உணவுகளான நெய் பொடி சாதம், ஆந்திரா பிரியாணி, பெசரட்டு தோசை, பால்கோவா போன்றவற்றை அவர்களுக்கு கொடுப்பார். இந்த வீட்டிற்கான முன்பதிவு மே 12-ல் இருந்து தொடங்குகிறது.

ஸ்ரீதேவி இல்லம்
ஸ்ரீதேவி இல்லம்

இந்த வீட்டில் தன்னுடைய குழந்தைப் பருவ நினைவுகள் இருக்கிறது என சொல்லும் ஜான்வி, தேர்ந்தெடுக்கப்பட்ட விருந்தினர்களுக்கு பிரத்யேகமாக, நான்கு ஏக்கரில் அமைந்துள்ள இந்த முழு வீட்டையும் சுற்றிக் காட்ட இருக்கிறார். கபூர் குடும்பத்தின் இந்த வாழ்க்கை முறையை தனது ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாட விரும்புவதாகவும் ஜான்வி தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?

நடிகை ஸ்ரீதேவியுடன் புகைபிடிக்கும் ராம்கோபால் வர்மா... மார்ஃபிங் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்... வைரலாகும் வீடியோ!

காதல் விவகாரத்தில் விபரீதம்... 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் மரணம்; சீரம் இன்ஸ்டிடியூட் மீது பெற்றோர் வழக்குப்பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in