51 வயதில் இரண்டாவது குழந்தை... பிரபல நடிகைக்கு குவியும் வாழ்த்து!

கணவருடன் கேமரூன் டயஸ்...
கணவருடன் கேமரூன் டயஸ்...

51 வயதில் தனது இரண்டாவது குழந்தைக்குத் தயாகியுள்ளார் ஹாலிவுட் நடிகை கேமரூன் டயஸ். இந்த செய்தியை அறிவித்துள்ள இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.

’தி ஹாலிடே’, ‘நைட் அண்ட் டே’ போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கேமரூன் டயஸ், கடந்த 2015ஆம் ஆண்டு தன்னை விட ஆறு வயதுக் குறைவான இசைக் கலைஞர் பென்சி மேடன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பெண் குழந்தை பிறந்தது. இவருக்குத் தற்போது 51 வயதாகும் நிலையில் இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இந்த ஆண் குழந்தைக்கு கார்டினல் மேடன் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

கேமரூன் டயஸ்
கேமரூன் டயஸ்

இந்த மகிழ்ச்சியானச் செய்தியை தனது கணவருடன் சேர்ந்து சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்து, ‘எங்களுக்கு ஆண் குழந்தை, கார்டினல் மேடன் பிறந்துள்ளான் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அவன் மிகவும் ஆரோக்கியமாக உள்ளான். குழந்தைகளின் தனிப்பட்ட உரிமைகளுக்காக, பாதுகாப்பிற்காக அவர்களின் புகைப்படங்களை இங்கு நாங்கள் பகிரவில்லை. மற்றபடி அவன் கியூட்டாக உள்ளான். அனைவரது அன்பிற்கும் நன்றி’ எனக் கூறியுள்ளார். கேமரூன் டயஸின் இந்த செய்திக்கு ரசிகர்களும் ஹாலிவுட் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in