நலன் குமாரசாமி - கார்த்தி நடிக்கும் புதிய படத்திற்கு 'வா வாத்தியார்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கலர்புல்லான பர்ஸ்ட்லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
'சூது கவ்வும்' படத்தின் படம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் நலன் குமாரசாமி. விஜய் சேதுபதி, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான காமெடி திரைப்படம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அப்படத்தின் திரைக்கதையும், டார்க் காமெடியும், படத்தின் மேக்கிங்கும் படத்தை திரும்ப திரும்ப பார்க்க வைத்தது.
அதன் பிறகு விஜய் சேதுபதி உடன் மீண்டும் 'காதலும் கடந்து போகும்' எனும் படத்தை இயக்கினார். இந்தப் படம் நல்ல விமர்சனத்தை பெற்றாலும், பெரிய வசூலை ஈட்டவில்லை. இதையடுத்து பல ஆண்டுகளாக, அடுத்தப்படம் குறித்து அவரின் அப்டேட் எதுவும் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், 'சூது கவ்வும்' படத்தை போல ஹிட் அடிக்க வேண்டும் எனும் முனைப்பில், புதிய படத்தில் கார்த்தி உடன் கூட்டணி அமைத்துள்ளார் நலன் குமாரசாமி. வித்தியாசமான கதை அம்சத்துடன், கலகலப்பான காமெடியும் நிறைந்த படமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. நலன் குமாரசாமி - கார்த்தி இணையும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் இன்று வெளியாகியுள்ளது.
இது கார்த்தி நடிக்கும் 26வது படம். எம்ஜிஆரின் பல்வேறு கெட்டப்புகளில் கலைஞர்கள் சுற்றி நிற்க, போலீஸ் உடையில் ஸ்டைலாக கார்த்தி நடுவில் நிற்கும் வகையில் பர்ஸ்ட்லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 'வா வாத்தியார்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கார்த்தியின் பிறந்த நாளான இன்று படக்குழு, ‘வா வாத்தியார்’ பர்ஸ்ட்லுக் வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
நேற்று கார்த்தி - அரவிந்த் சாமி கூட்டணியில் உருவாகும் 'மெய்யழகன்' படத்தின் பர்ஸ்ட்லுக்கை படக்குழு வெளியிட்டிருந்தது. இது கார்த்தி நடிக்கும் 27வது படம். ‘96’ படத்தின் மூலம் காதலை வேறு ஒரு பரிணாமத்தில் கொடுத்த பிரேம்குமார், ‘மெய்யழகன்’ படத்தை இயக்குகிறார். கிராமத்து பின்னணியில் வித்தியாசமான கதையம்சத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், கார்த்தி பிறந்தநாளான இன்று ‘வா வாத்தியார்’ பர்ஸ்ட்லுக் வெளியாகி, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கேன்ஸ் விழாவில் சிறந்த நடிகைக்கான விருது.. வரலாறு படைத்தார் இந்திய நடிகை!
நிறைமாத நிலவே வா... வா... நடிகை அமலபால் லேட்டஸ்ட் போட்டோஷூட்
ரூ. 640 கோடியில் மருமகளுக்குப் பரிசு... அசத்திய அம்பானி மனைவி!
ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகனுடன் மது விருந்து நடத்திய குற்றவாளி!