சூர்யாவின் `வாடிவாசல்’ பற்றி அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

நடிகர் சூர்யாவின் ‘வாடிவாசல்’ படம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் அப்டேட் கொடுத்துள்ளார்.

அமீர் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘மாயவலை’ படத்தை இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார். இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “நடிப்பது, இயக்குவது இரண்டும் வேறு வேறு சவாரி. இரண்டையும் ஒரு சிலரால் தான் சமாளிக்க முடியும். அது என்னிடம் இல்லை. அதனால், இப்போது நடிக்கும் ஆர்வம் இல்லை. 'வட சென்னை' ராஜன் ரோல் பலர் நடிப்பதாக இருந்து தள்ளிப்போனது.

அமீர் வெற்றிமாறன்
அமீர் வெற்றிமாறன்

கடைசியாக அமீரைப் போய்ச் சந்தித்தேன். கேரக்டர் சொல்லாமலே எனக்காக நடிக்கிறேன் என்றார். ஆனால் கேரக்டர் சொன்ன பிறகு இந்தக் கேரக்டருக்கு சரியாக இருக்கமாட்டேன் என்று நினைத்தார். ஆனால் எனக்காக நடிக்க வந்தார். அப்போதிலிருந்து இப்போது வரை எங்கள் நட்பு தொடர்கிறது. எல்லாவற்றைப் பற்றியும் நிறையப் பேசுவோம்” என்றார்.

‘வாடிவாசல்’
‘வாடிவாசல்’

மேலும், ‘வாடிவாசல்’ படத்தில் இயக்குநர் அமீர் நடிக்க இருப்பதையும் மேடையில் இயக்குநர் வெற்றிமாறன் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு முன்பு அமீர் இயக்கத்தில் ‘மெளனம் பேசியதே’ படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்தார். இதன் பிறகு பத்து வருடங்கள் கழித்து ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா, அமீர் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in