விறு விறுப்பாகத் தொடங்கிய 'சார்பட்டா 2' பணி: பட்ஜெட் ரூ.90 கோடி!

சார்பட்டா படத்தில் ஆர்யா
சார்பட்டா படத்தில் ஆர்யா

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘சார்பட்டா2’ படத்தின் வேலைகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இப்போது அந்தப் படத்தின் பட்ஜெட் குறித்தானத் தகவலும் வெளியாகியுள்ளது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, துஷாரா உள்ளிட்டப் பலர் நடித்திருந்த திரைப்படம் ‘சார்பட்டா’. கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா காரணமாக நேரடியாக ஓடிடியில் வெளியானப் படங்களில் இதுவும் ஒன்று. படம் பெரும் வெற்றிப் பெற்ற நிலையில், அப்போதே படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பாக்ஸிங்கை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில் மாரியம்மா, டான்சிங் ரோஸ், வாத்தியார் என ஒவ்வொரு கதாபாத்திரமுமே ரசிகர்களைக் கவர்ந்தது. இப்படியான சூழ்நிலையில்தான், இதன் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன.

’சார்பட்டா2’ படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் தொடங்கியுள்ளது. திரைக்கதை தீவிரமாகி இருக்கும் அதே சமயம், இதற்கான பாக்ஸிங் பயிற்சியிலும் நடிகர் ஆர்யா ஈடுபட்டுள்ளார். இதற்கான வீடியோவையும் சமீபத்தில் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

தற்போது இந்தப் படத்தின் பட்ஜெட் குறித்தானத் தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது, ‘சார்பட்டா 2’ படத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 90 கோடி அளவில் பட்ஜெட் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ‘சார்பட்டா’ படத்தின் முதல் பாகத்தை விஞ்சும் அளவுக்கு பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக உள்ளதாலேயே இந்த பட்ஜெட் என்கின்றனர்.

’தங்கலான்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் பிஸியாக உள்ள இயக்குநர் பா.ரஞ்சித் அதன் வெளியீட்டிற்குப் பின்னர், இந்தப் படத்தைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in