ரஜினி, விஜய்க்குதான் சூப்பர் ஸ்டார்கள் தேவை; விளாசிய இயக்குநர் அமீர்!

இயக்குநர் அமீர்
இயக்குநர் அமீர்

ரஜினி, விஜய்க்குதான் தங்கள் படங்களில் பக்கத்து மாநில சூப்பர் ஸ்டார்கள் தேவை என இயக்குநர் அமீர் பேசியுள்ளார்.

ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அமீர் தயாரித்திருக்கும் ‘மாயவலை’ படத்தை இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார். இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் அமீர் பேசியதாவது, “ 'மாயவலை' தொடங்கியதன் நோக்கம் ஒன்று தான். இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் தான் இதன் மூல காரணம். அவருக்கு சினிமா செய்ய வேண்டும் என்பது தான் ஆசை. சரி வாருங்கள் பண்ணலாம் என்றேன். ஒரு கதை சொன்னார். அதைப் பண்ணலாம் என பல ஹீரோக்களிடம் கதை சொன்னோம். ஆனால் நடக்கவில்லை. கடைசியில் நீயே நடி என்றார். சரிண்ணே என்று சொல்லி ஆரம்பித்தது தான் இந்தப்படம்” என்றார்.

'மாயவலை’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு...
'மாயவலை’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு...

மேலும் அவர் பேசியதாவது, “சினிமா அறிவு உள்ளவர்களை ரசிப்பது தான் எனது வேலை. இந்தப் படத்தில் நான் நடித்துள்ளது எனக்கே புது அனுபவமாகதான் உள்ளது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெற்றிமாறன் அவரே வெளியிடுவதாக கூறினார். ரஜினிக்கும் விஜய்க்கும் பக்கத்து மாநில சூப்பர் ஸ்டார்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், எனக்கு வெற்றிமாறனோ, வெற்றி மாறனுக்கு நானோ தேவைப்படுவது புதிதல்ல. சுயமரியாதையுடன் வாழும் கோபக்காரன் நான். ’ஜப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை. நானும் போகவில்லை” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in