முட்டாள்தனம்... அதைப்பற்றி கேட்டாலே மீனா முறைப்பாள்; கலா மாஸ்டர் பேட்டி!

கலா மாஸ்டர்
கலா மாஸ்டர்

ரஜினி, கமல், விஜய் என தமிழ் சினிமாவில் பல முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியவர் கலா மாஸ்டர். தேசிய விருது, மாநில விருது என பல விருதுகளை வாங்கிக் குவித்தவர் தன்னுடைய சினிமா பயணம், தன் வாழ்க்கையில் நட்பு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது, தான் பணியாற்றிய பாடல் அனுபவம் என பலவற்றைக் குறித்தும் ‘காமதேனு’ யூடியூப் தளத்தில் பேசியவர், நடிகை மீனாவின் இரண்டாவது திருமணம் என்ற செய்திக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

நடிகை மீனாவின் நெருங்கிய தோழியாகவும் அவரது நலன் விரும்பியாகவும் இருக்கிறார் கலா மாஸ்டர். மீனாவின் கணவர் சாகர் இறப்பின் போது கூட முதல் ஆளாக நின்று அனைத்து காரியங்களையும் எடுத்து செய்தார் கலா. சாகர் இறப்பிற்குப் பிறகு மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்தான செய்திகள் வலம் வர அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது குறித்து கலா காமதேனு யூடியூப் தளத்திற்குக் கொடுத்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது, “மீனாவுக்கு இரண்டாவது திருமணம் என்ற செய்தி சாகர் இறந்த இரண்டாவது நாளில் இருந்தே வந்து கொண்டிருக்கிறது. அதெப்படி முடியும்? இவ்வளவு சின்ன வயதிலேயே மீனா தனது கணவரை இழந்திருக்கும் போது அந்த துயரத்தில் இருந்து மீண்டு வர அவளுக்கு எத்தனை வருடங்கள் ஆகும்?

மீடியா இதுபோன்ற செய்திகளைப் போட்டாலும் ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா எனத் தெரியாது. என்னிடமே சில பேர் இதுகுறித்துக் கேட்டார்கள். ஏன் இப்படி முட்டாள்தனமாகக் கேட்கிறீர்கள் எனத் திட்டினேன். ’மீனா 40’ நிகழ்ச்சியில் மீனா குழந்தை இதுபற்றி தெளிவாக சொன்ன பிறகும் கூட சிலர் இதுபற்றி செய்தி பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். தோழிகளுக்குள் நாங்களே மீனாவிடம் விளையாட்டாகக் கேட்டால் கூட, அவள் என்னை முறைப்பாள். நினைத்தால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இது காய்கறி வாங்கும் விஷயம் கிடையாது” எனக் கூறினார்.

இதுமட்டுமல்லாது, ஆரம்ப காலத்தில் தனது சினிமா பயணம், நடனம் மீது தனக்குள்ள காதல், ஒரு படத்திற்காகத் தான் கொடுக்கும் அர்ப்பணிப்பு, தனது தோழிகள் குஷ்பு, மீனா, ரம்பா என பல விஷயங்கள் குறித்தும் இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார் கலா.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... வேர்ல்டு கப் பைனல்... நடிகர் அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து மிரட்டல்!

பிக் பாஸ் வீட்டில் ரணகளம்... விசித்ராவுடன் மல்லுக்கட்டிய நிக்ஸன்!

விஜய்சேதுபதி, மஞ்சுவாரியருக்காக புது டெக்னாலஜி... தமிழ் சினிமாவின் அடுத்த பாய்ச்சல்!

வீலிங் செய்து எமனுக்கு காலிங்... டூ வீலரில் இளைஞரின் அட்டகாசம்!

குட் நியூஸ்... இனி புக் செய்த அனைவருக்கும் ரயில் டிக்கெட்; ரயில்வேயின் புதிய திட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in