கிரிக்கெட்டர் ஹர்திக் பாண்டியா- நடாஷா விவாகரத்து? - தீயாய் பரவும் தகவல்!

ஹர்திக் பாண்டியா- நடாஷா
ஹர்திக் பாண்டியா- நடாஷா

கிரிக்கெட்டர் ஹர்திக் பாண்டியா, தனது மனைவி நடாஷாவை விவாகரத்து செய்ய இருக்கிறார் என்ற செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா. இவருக்கும் செர்பிய நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சுக்கும் கடந்த 2020ல் திருமணம் நடந்தது. அதே வருடம் இந்த ஜோடிக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.

மனைவி மற்றும் குழந்தையுடன் ஹர்திக்
மனைவி மற்றும் குழந்தையுடன் ஹர்திக்

இருவரும் தங்கள் சமூகவலைதளப் பக்கங்களில் தங்களது மகிழ்ச்சியான தருணங்களைத் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். கடந்த சில மாதங்களாகவே இந்த ஜோடியை சுற்றி விவாகரத்து செய்தி வட்டமடித்தது. இருவரும் தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் சொல்லப்பட்டது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் நடாஷா தனது சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து தனது கணவரின் பெயரை நீக்கியதுடன் அவருடன் இருந்தப் புகைப்படங்களையும் நீக்கி ரசிகர்களை அதிர வைத்தார். மேலும், ஐபிஎல் போட்டிகளையும் பார்க்க நடாஷா நேரில் வரவில்லை.

பிறந்தநாளுக்காக எந்தவொரு பதிவையும் அவர் பகிரவில்லை. இந்த காரணங்களை எல்லாம் சேர்த்து வைத்து இந்த விவாகரத்து செய்தியை இணையத்தில் பரப்பி வருகின்றனர். ஹர்திக்கின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பம்தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விகளுக்கும் காரணம் என சொல்லி வருகின்றனர் பலர்.

ஹர்திக்கின் சொத்து மதிப்பு சுமார் ரூ.165 கோடி. ஒருவேளை, விவாகரத்து நடந்தால் நடாஷாவுக்கு 70% ஜீவனாம்சமாக தனது சொத்துகளை விட்டுக் கொடுக்கிறார் ஹர்திக். ஆனால், விவாகரத்து செய்திகள் குறித்து இருவரும் இதுவரை எதுவும் தெளிவுப்படுத்தவில்லை. இந்த செய்தி வதந்தியாகவே இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

இதையும் வாசிக்கலாமே...

கேன்ஸ் விழாவில் சிறந்த நடிகைக்கான விருது.. வரலாறு படைத்தார் இந்திய நடிகை!

நிறைமாத நிலவே வா... வா... நடிகை அமலபால் லேட்டஸ்ட் போட்டோஷூட்

ரூ. 640 கோடியில் மருமகளுக்குப் பரிசு... அசத்திய அம்பானி மனைவி!

சொகுசு ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியதில் ரூ.80 லட்சம் பில் பாக்கி... 18 சதவீத வட்டியுடன் செலுத்த எச்சரிக்கை!

ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகனுடன் மது விருந்து நடத்திய குற்றவாளி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in