’வீர தீர சூரன்’ போஸ்டர் விவகாரம்; நடிகர் விக்ரம் மீது போலீஸில் புகார்!

வீர தீர சூரன் டீசர் வீடியோ
வீர தீர சூரன் டீசர் வீடியோ

’வீர தீர சூரன்’ திரைப்பட போஸ்டர் வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளதால் நடிகர் விக்ரம் மற்றும் இயக்குனர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’சித்தா’ பட இயக்குனர் சு.அருண்குமார் இயக்க உள்ள விக்ரம் 62 படத்திற்கு ’வீர தீர சூரன்’ என பெயரிடப்பட்டுள்ளது. சினிமா துறையில் புதிய முயற்சியாக இரண்டாம் பாகத்தை முதலிலும், முதல் பாகத்தை அடுத்ததாகவும் எடுக்க உள்ளதாக திரைப்படக் குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. மேலும் யூடியூபில் ஒரு கோடி பார்வைகளை கடந்து அசத்தியது.

வீர தீர சூரன் டீசர் போஸ்டர்
வீர தீர சூரன் டீசர் போஸ்டர்BG

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில், மதுரையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் திரைப்படத்தின் மீதும், நடிகர் விக்ரம் மீதும் சமூக ஆர்வலர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த புகாரை அளித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகம்
சென்னை காவல் ஆணையர் அலுவலகம்

’இணையத்தில் இளைஞர்கள் கத்தியை வைத்து கேக் வெட்டுவது போல் வீடியோ வெளியிடுவது, சமூக வலைதளங்களை கத்தியை வைத்துக்கொண்டு ரிலீஸ் போடுவது போன்றவற்றை பகிர்வதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே போல் சமூக வலைதளங்களில் கத்தியை வைத்து புகைப்படம் எடுத்து வேறொரு வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களில் பகிர்வோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் தற்போது ’வீர தீர சூரன்’ என்ற படத்தில், நடிகர் விக்ரம் தனது இரண்டு கையில் கத்தியை வைத்துக் கொண்டிருப்பது போன்ற போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகி உள்ளது.’

‘இது பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு செல்லும். எனவே இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் கீழ் 326 ன்படி இந்த செயல்பாடு தவறு. இந்த பட போஸ்டர் இளைஞர்கள் மத்தியில் வன்மத்தை தூண்டும் வகையில் உள்ளதால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தவறானது. எனவே நடிகர் விக்ரம், இயக்குனர் அருண்குமார், புகைப்பட கலைஞர், ஒளிப்பதிவாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்த புகாரில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியாவை விட்டு வெளியேறுவோம்... டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் - அப் அதிரடி கருத்து

கர்நாடகாவில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு... பிரகாஷ் ராஜ், ராகுல் டிராவிட் ஆகியோர் வாக்குகளை செலுத்தினர்

கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு... ராகுல், சுரேஷ்கோபி, சசி தரூர், தேறுவார்களா?

13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது... ஆர்வமுடன் திரண்ட வாக்காளர்கள்!

பாலிவுட் போனதும் ஆளே மாறியாச்சு... கீர்த்தி சுரேஷின் செம ஹாட் புகைப்படங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in