திரையுலகில் பரபரப்பு... நடிகர் மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு!

நடிகர் மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான்

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

த்ரிஷா, மன்சூர் அலிகான்.
த்ரிஷா, மன்சூர் அலிகான்.

'லியோ' படம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் நடிகை த்ரிஷா குறித்து மிகச் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. மன்சூர் அலிகானின் இந்த பேச்சு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இதனால் மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகர், நடிகைகள், நடிகர் சங்கம் என பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகானின் த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

தமிழ்நாடு மகளிர் ஆணையம்
தமிழ்நாடு மகளிர் ஆணையம்

மேலும் த்ரிஷா குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு மாநில மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியது.

இதுதொடர்பாக டிஜிபி சென்னை காவல் ஆணையருக்கு பரிந்துரைத்ததன் பேரில் ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸார் நடிகர் மன்சூர் அலிகான் மீது 509 (பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் செயல்) மற்றும் 354(ஏ) (பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல்) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in