பிக் பாஸ்7: அழகு இருக்கு... அறிவில்ல... சகுனி வேலை... இந்த வார நாமினேஷனில் யார்?

பிக் பாஸ் வீட்டில்...
பிக் பாஸ் வீட்டில்...

பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் யார் யார் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு உடல் நிலையை காரணம் காட்டி பவா செல்லதுரை வெளியேறினார். முதல் வாரத்திலேயே இரண்டு நபர்கள் வெளியேறியதால் இந்த வாரம் நாமினேஷன் கிடையாது என பிக் பாஸ் அறிவித்தார். இந்த நிலையில், இந்த வாரத்திற்கான நாமிநேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சிக்கியவர்கள் பற்றிய புரோமோ வெளியாகி உள்ளது. இதில் பிக் பாஸ் வீட்டில் உள்ள பெரும்பாலானோர் முதலில் குறிப்பிட்டது மாயாவின் பெயரை தான். அவர் சகுனி வேலை பார்ப்பதாகவும் போட்டியாளர்கள் பேசி வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக அவருடன் நெருங்கி பழகி வரும் பூர்ணிமாவை டார்கெட் செய்துள்ளனர். குறிப்பாக ரவீனா, அவரிடம் அழகு இருக்குற அளவுக்கு அறிவு இல்லை என கூறி பூர்ணிமாவை நாமினேட் செய்துள்ளார்.

மூன்றாவதாக பிரதீப்பின் பெயரும் இந்த நாமினேஷன் லிஸ்ட்டில் சிக்கி உள்ளது. அதேபோல் சுமால் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள், ஐஷூ, மணி சந்திரா, விசித்ரா ஆகியோரை நாமினேட் செய்துள்ளனர். இந்த வாரமும் மாயா மற்றும் பூர்ணிமா ஆகியோர் நாமினேஷனில் சிக்கி உள்ளதால் அவர்கள் இருவரில் ஒருவர் கண்டிப்பாக எலிமினேட் ஆகிவிடுவார்கள் என தற்போதே பிக் பாஸ் பார்வையாளர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in