போட்டியாளர்களைக் கண்கலங்க வைத்த பிக் பாஸ் டாஸ்க்: ரச்சிதா பிரிவை வெளிப்படையாக பேசிய தினேஷ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினேஷ்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினேஷ்.

பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள், தங்கள் வாழ்க்கையில் தடுமாறச் செய்த விஷயம் குறித்து டாஸ்க் ஒன்றைக் கொடுக்க போட்டியாளர்கள் கண்கலங்கியபடி பேசியுள்ளனர். இதில் தினேஷ், ரச்சிதாவை பிரிந்துள்ளது குறித்து மனம் திறந்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் அதிரடி ட்விஸ்ட்களைக் கொடுத்து வருகிறார் பிக் பாஸ். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்கெனவே ஐந்து போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்தது மட்டுமல்லாமல், இப்போது எக்ஸ் போட்டியாளர்கள் மூன்று பேரும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வர இருக்கிறார்கள். இவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற்றால் மட்டுமே போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் தொடர முடியும் எனவும் ரூல் போட்டுள்ளார் பிக் பாஸ்.

இதனையடுத்து, தங்கள் வாழ்க்கையைத் தடுமாற செய்த விஷயத்தை போட்டியாளர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மாயா தனக்கு ஏடிஹெச்டி உள்ளது பற்றி கூறியுள்ளார். ஜோவிகா தனது பாட்டி மறைவு பற்றி அழுது கொண்டே பேச, தினேஷ் ரச்சிதா பிரிவு பற்றி பேசியுள்ளார்.

அதில், ‘நானும் என் மனைவியும் மன அழுத்தத்திற்குள் போய், இதுவரையிலும் இருவரும் விட்டுக் கொடுக்க முடியாமல் உள்ளோம். இதுவரையில் இந்த விஷயத்தை நான் எதிர்கொண்டுதான் உள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ப்பா... கிளாமரில் தெறிக்க விட்ட தமன்னா

நெகிழ்ச்சி... சாவிலும் இணைபிரியாத அக்கா, தம்பி!

அடுத்த சர்ச்சை... தேசிய கீதத்தை அவமானப்படுத்திய மன்சூர் அலிகான்!

மன்சூர் அலிகான் தப்புன்னா... ரஜினி பேசுனதும் தப்பு தான்!

அடாவடி வசூல்... கழிவறை கட்டண குத்தகைதாரருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து தீர்ப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in