3 அடிதான் உயரம்... தடைகளைத் தகர்த்து திருமணம் செய்யும் பிக் பாஸ் பிரபலம்!

அபு ரோசிக்
அபு ரோசிக்

3 அடி உயரம் கொண்ட பிரபல பாடகர் அபு ரோசிக் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருக்கும் விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். இவருக்குப் பலரும் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் அபு ரோசிக். சமூலவலைதளங்களில் பிரபல் இன்ஃபுளூயன்சராக வலம் வரும் இவர் பாடகரும் கூட. நடிகர் சல்மான் கான் இந்தியில் தொகுத்து வழங்கிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16-வது சீசனில் இவர் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.

தோனியுடன் அபு...
தோனியுடன் அபு...

சல்மான் கான், ரஹ்மான், தோனி என பல பிரபலங்களுடன் நட்பாக பழகி அவர்களுடன் இவர் எடுத்துப் பகிரும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெகுபிரபலம். 20 வயதாகும் இவர் 3 அடிதான் உயரம் கொண்டவர். அந்த தடைகளை எல்லாம் தகர்த்து எப்போதும் சிரித்த முகமாகவும் தன்னம்பிக்கையுடனும் வலம் வரும் இவர், தற்போது தனக்குத் திருமணம் நிச்சயமாகி இருக்கும் விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

தஜிகிஸ்தானி பாடகி அமிராவைத்தான் இவர் திருமணம் செய்ய உள்ளார். கடந்த ஏப்ரல் மாதமே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், ஜூலை 7-ம் தேதி தனக்குத் திருமணம் ஆக இருக்கிறது என்பதையும் கூறியிருக்கிறார் அபு. தன் வாழ்வில் இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்பதை, தான் நினைத்துப் பார்க்கவே இல்லை என்று கூறியிருப்பவர் அனைவரது அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி சொல்லியிருக்கிறார்.

தனது காதலிக்கு இதய வடிவிலான வைர மோதிரத்தையும் நிச்சயதார்த்தத்தின் போது அபு அணிவித்துள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்திக்கு இசையமைப்பாளர் ரஹ்மான் உட்பட பல பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த அதிர்ச்சி...  சிவகாசியில் மற்றொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!

கனமழை: கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் 50 பேர் பலி!

உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி... அள்ளி வழங்கும் அமெரிக்கா!

மனைவி நடத்தையில் சந்தேகம்... 2 குழந்தைகளைக் கொன்று விட்டு கணவனும் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in