நடிகை வரலட்சுமிக்கு மும்பை தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்... சீக்கிரம் டும் டும் டும்!

வரலட்சுமி நிகோலய் சச்தேவ்
வரலட்சுமி நிகோலய் சச்தேவ்

மும்பை தொழிலதிபருடன் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு தற்பொழுது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.

வரலட்சுமி நிகோலய் சச்தேவ்
வரலட்சுமி நிகோலய் சச்தேவ்

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பை தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நடிகர் சரத்குமாரின் மகளாக சினிமா துறையில் நடிக்க வந்தார் வரலட்சுமி. 'போடா போடி', 'சண்டக்கோழி 2' எனப் பல படங்களில் நடித்தார். தற்பொழுது வெளியாகும் தமிழ், தெலுங்கு படங்களில் வில்லியாகவும் மிரட்டி வருகிறார்.

வரலட்சுமி நிகோலய் சச்தேவ்
வரலட்சுமி நிகோலய் சச்தேவ்

இப்பொழுது அவருக்கு மும்பை தொழிலதிபருடன் குடும்பம் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனை நடிகை ராதிகா சரத்குமார் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகை ராதிகா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ' வரலஷ்மிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ்வுக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்து, மும்பையில் நேற்று உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயதார்த்தம் முடித்தோம். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும்' என்று கூறியுள்ளார்.

வரலட்சுமி சரத்குமார்
வரலட்சுமி சரத்குமார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in