'விடாமுயற்சி’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து புகைப்படம் பகிர்ந்த நடிகை த்ரிஷா!

நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா

'விடாமுயற்சி’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து நடிகை த்ரிஷா புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. இதில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இன்னும் படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை என்றாலும், த்ரிஷா அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா

புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ‘இந்த உலகமே எனது சிப்பிக்குள்’ என்ற கேப்ஷனோடு பகிர்ந்துள்ளார். அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளோடு அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்புத் தொடங்கியுள்ளது. ஏர்போர்ட்டில் அஜித் மற்றும் த்ரிஷாவுடன் ரசிகர்கள் எடுத்தப் புகைப்படங்கள் வைரலானது.

நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா

’கிரீடம்’, ‘ஜீ’, ‘மங்காத்தா’, ‘என்னை அறிந்தால்’ ஆகிய படங்களுக்குப் பிறகு ஐந்தாவது முறை அஜித்துடன் த்ரிஷா ‘விடாமுயற்சி’ படம் மூலம் இணைந்துள்ளார். விஜய்யுடன் த்ரிஷா நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in