காதலரைக் கரம் பிடித்தார் நடிகை தாப்ஸி... குவியும் வாழ்த்துகள்!

நடிகை தாப்ஸி
நடிகை தாப்ஸி

நடிகை தாப்ஸி தனது நீண்ட நாள் காதலரான மத்யாஸ் போவை கடந்த மார்ச் 23 அன்று உதய்ப்பூரில் திருமணம் செய்துள்ளார். நண்பர்கள், உறவினர்கள் என நெருங்கியவர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

காதலருடன் தாப்ஸி
காதலருடன் தாப்ஸி

கடந்த பிப்ரவரி மாதத்தில் நடிகை தாப்ஸிக்கும் அவரது காதலர், முன்னாள் பேட்மிண்டன் ப்ளேயர் மத்யாஸ் போவுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அந்த செய்தியை தாப்ஸி மறுத்தார். இப்படியான சூழ்நிலையில்தான் கடந்த மார்ச் 23 அன்று இந்த ஜோடிக்கும் உதய்ப்பூரில் திருமணம் நடந்துள்ளது. நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இவர்களது ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் மார்ச் 20 அன்றே தொடங்கி இருக்கிறது. பாலிவுட்டில் இருந்து வெகு சில பிரபலங்கள் மட்டுமே தாப்ஸி திருமணத்தில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.

நடிகை தாப்ஸி
நடிகை தாப்ஸி

தமிழில் ‘ஆடுகளம்’, ‘காஞ்சனா’, ‘கேம் ஓவர்’ போன்ற படங்களில் நடித்திருக்கும் தாப்ஸி, பாலிவுட்டிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். முன்னாள் பேட்மிண்டன் ப்ளேயர் மத்யாஸ் போவை கடந்த 10 வருடங்களாகக் காதலித்து வந்தார் தாப்ஸி. தனது தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்து பொதுவெளியில் பகிர்வதில் அதிகம் ஆர்வம் காட்டாதவர் தற்போது திருமணத்தையும் பிரைவேட்டாக முடித்துள்ளார்.

விரைவில் இவரது திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ செய்திகளை எதிர்பார்க்கலாம்.

இதையும் வாசிக்கலாமே...

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in