திருமணத்திற்குத் தயாராகும் தமன்னா- விஜய் வர்மா ஜோடி... எப்போது தெரியுமா?

தமன்னா-விஜய் வர்மா
தமன்னா-விஜய் வர்மா

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளான தமன்னா- விஜய் வர்மா ஜோடி எப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறது என்பது குறித்தானத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமன்னா
தமன்னா

தமிழ், தெலுங்கி முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா ‘ஜெயிலர்’ படத்தின் காவாலா பாடல் மற்றும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ்2’ வெப் சீரிஸூக்குப் பிறகு இந்திய அளவில் அதிக ரசிகர்களை தக்க வைத்துள்ளார். இவரும் நடிகர் விஜய் வர்மாவும் காதல் பறவைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இவர்களது திருமணம் குறித்தானக் கேள்விகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது. இதுகுறித்தான கேள்விக்கு நடிகை தமன்னா, ‘இப்போதைக்குத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் சுத்தமாக இல்லை’ எனக் கூறியிருந்தார்.

 தனது அம்மாவுடன் தமன்னா
தனது அம்மாவுடன் தமன்னா

ஆனால், 33 வயதாகக்கூடிய தமன்னா தற்போது பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், இவரது நிச்சயதார்த்தம் டிசம்பர் இறுதி வாரம் அல்லது ஜனவரியில் நடக்கும் எனவும் பிப்ரவரி மாதம் திருமணம் எனவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து விரைவில் தமன்னா- விஜய் வர்மா ஜோடி அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in