‘தக தகவென ஆடவா... இணையத்தை தெறிக்க விட்ட நடிகை சிம்ரன்!

சிம்ரன்
சிம்ரன்

நடிகை சிம்ரன் டான்ஸ் ஆடி பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்களை ஒருபக்கம் கவர்ந்திருந்தாலும் அந்த நடனத்தை ஒரு சிலர் கேலியும் செய்து வருகின்றனர்.

நடிகை சிம்ரன்
நடிகை சிம்ரன்

தனது இடுப்பை அசைத்து நடனமாடும் நளினத்திற்காகவும், தேர்ந்த நடிப்பிற்காகவும் இளசுகளின் தூக்கத்தைக் கெடுத்தவர் நடிகை சிம்ரன். இவரது நடனத்தைப் பார்க்கவே படம் பார்க்க வந்தவர்கள் அப்போது ஏராளம். இப்போதும் திருமணம், குழந்தை, ஹோட்டல் பிசினஸ் என பிஸியாக வலம் வரும் சிம்ரன், தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் இவர் நடித்திருந்த ‘மகான்’ திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளான நிலையில், இந்த விஷயத்தை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தது. மேலும், நடிகர் விக்ரமும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘மகான்’ கெட்டப்பில் புகைப்படங்களைப் பகிர்ந்து ‘மகான்2’? எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த விஷயம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில், இப்போது நடிகை சிம்ரன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘தக தகவென ஆடவா’ பாடலுக்கு செம எனர்ஜியோடு நடனம் ஆடி வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். பாலா இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், சூர்யா நடித்திருந்த ‘பிதாமகன்’ படத்தில் ஸ்பெஷலாக ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார் சிம்ரன். சிம்ரனும் சூர்யாவும் இணைந்து ஆடியிருந்த பாடல் தான் இந்த ‘தகதக.. தகதகவென ஆடவா’.

அந்த பாடலை இப்போது ரீ-கிரியேட் செய்து, ‘நடனம் தான் எனது மொழி’ எனக் கூறியுள்ளார் சிம்ரன். இவரது இந்த நடனம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், ஒரு சிலர் ‘இதைவிட சூப்பரா சரத்குமார் சார் சிம்ம ராசி படத்துல ஆடுவார்’ என்றும் ‘என்ன சிம்ரன் இதெல்லாம்’ என்று கேலி செய்யும் விதத்திலும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முடிவாகிறது தொகுதிகளின் எண்ணிக்கை... மூன்று கட்சிகளுடன் திமுக பேச்சு!

தமிழகத்தில் எமர்ஜென்சியா...? பகீர் கிளப்பிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

வெளியானது வேட்பாளர் பட்டியல்... பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!

அயோத்தி செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்... பஞ்சாப் முதல்வருடன் ராமர் கோயிலில் வழிபாடு!

தமிழகமே அதிர்ச்சி... ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in