
தீபாவளி பண்டிகையை காதலருடன் நடிகை ஸ்ருதிஹாசன் கொண்டாடிய புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தீபாவளி திருநாள் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் தீபாவளி கொண்டாட்ட படங்களை பகிர்ந்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் துவங்கி, நாடு முழுவதும் உள்ள சினிமா நட்சத்திரங்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்ருதிஹாசன் தனது காதலர் சாந்தனு ஹசரிக்காவுடன் கொண்டாடிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
பட்டு வேட்டி சட்டையில் சாந்தனுவும், புடவையில் ஸ்ருதிஹாசனும் இருக்கும் புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர். மேலும் நண்பர்களுடன் பாட்டு பாடி கொண்டாடிய வீடியோ ஒன்றையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் ரசிகர்கள், காதலர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல் மற்றொரு நடிகையான ப்ரியா பவானி சங்கர், அவரது காதலர் ராஜவேலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ”நீதான் என் வெளிச்சம். நீதான் எனது வீடு. வெகு தூரத்தில் இருந்து எனது அன்பை அனுப்புகிறேன்” என காதலருக்கு தீபாவளி வாழ்த்து உள்ளார். இந்த இருவரது புகைப்பட பதிவுகளிலும் ”உங்களுக்கு எப்போது திருமணம்” என ரசிகர்கள் தொடர்ந்து கமென்ட் செய்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
சிவகாசி : தீபாவளிக்கு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை!
நாளை தெறிக்கப் போகுது தமிழகம்... 234 தொகுதிகளில் 8,647 கி.மீ தூரம் திமுக வாகனப் பேரணி!
பனிக்குடம் உடைந்து கதறிய கர்ப்பிணி: 108 ஆம்புலன்ஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
இடுப்பளவு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: தொடர் மழையால் விவசாயிகள் கண்ணீர்!